ரயில்களில் குறுகிய தூரம் பயணம் செய்ய முன்பதிவு முறை – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

0
ரயில்களில் குறுகிய தூரம் பயணம் செய்ய முன்பதிவு முறை - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயில்களில் குறுகிய தூரம் பயணம் செய்ய முன்பதிவு முறை - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயில்களில் குறுகிய தூரம் பயணம் செய்ய முன்பதிவு முறை – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

ரயில்வே துறையில் பயணிகளின் வசதிக்காக பல முன்பதிவு பெட்டிகள் இயங்கி வருகின்றன. பொதுவாக அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்கு முன்பதிவு முறை இருந்து வந்தது. தற்போது குறைந்த தூரம் பயணம் செய்பவர்களுக்கும் முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே:

இந்தியாவில் போக்குவரத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அதாவது மக்கள் தங்களது வேலைகளை எளிதில் செய்து முடிக்க போக்குவரத்து அவசியமானதாக உள்ளது. இந்தியாவில் ரயில் போக்குவரத்து மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் இதில் மற்ற போக்குவரத்து கட்டணங்களை காட்டிலும் குறைவாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. மேலும் ஒரே நேரத்தில் அதிகமான பயணிகளை வைத்து இயக்க கூடியதாக இருப்பதாலும், பயணம் செய்ய ஏதுவான வசதிகள் இருப்பதாலும் மக்கள் அதிகம் ரயில் பயணங்களை விரும்புகின்றனர்.

நாட்டில் கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறகு தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியதால் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ரயில் சேவைகளில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில், சிறப்பு ரயில் போன்றவைகள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து அனைத்து ரயில் சேவைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 17ல் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

இந்தியாவில் உள்ள ரயில் போக்குவரத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏதுவாக முன்பதிவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய ரயில்களில் அனைத்து வசதிகளும் இடம் பெற்றிருக்கும். இதன் காரணமாக மக்கள் ரயில்களில் அதிகம் பயணிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது குறுகிய தூரம் பயணம் செய்வோர் வசதிக்காக குறிப்பிட்ட பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கும்பகோணம் வழியாக செல்லும் எழும்பூர்- ராமேஸ்வரம் எஸ் 12, எஸ் 13, பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து மானாமதுரை- ராமேஸ்வரம் இடையே 2 பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!