தமிழகத்தில் வரும் செப்டம்பர் 17ல் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

0
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 17ல் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 17ல் வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரம் இதோ!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 17ல் வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரம் இதோ!

மதுரையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி மாற்றுத்திறனாளி மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி பயன்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடி கொண்டிருக்கும் இளைஞர்களின் நலனுக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை, நெல்லை, திருச்சி போன்ற மாவட்டங்களில் நடத்தப்பட்டது. தற்போது முதன்முறையாக மதுரையில் நடைபெற இருக்கிறது.

அதாவது, மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு முகாம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. மேலும், இந்த முகாமில் நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கின்றனர். மதுரையில் மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு முகாமை நேற்று தான் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிறுவனர் காசிம்பாசித், மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் என பலரும் கலந்துகொண்டனர்.

PM Kisan திட்ட விவசாயிகள் கவனத்திற்கு – eKYC ஐ முடிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

மேலும், செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் திருநங்கைகள், திருநம்பிகள் என அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் www.weareyourvoice.org என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தங்களது விவரங்களை பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்பினால் 75575 50999, 97007 9999 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here