ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – வீட்டில் இருந்தே படியே அப்டேட் செய்வது எப்படி?

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - வீட்டில் இருந்தே படியே அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - வீட்டில் இருந்தே படியே அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – வீட்டில் இருந்தே படியே அப்டேட் செய்வது எப்படி?

இந்தியாவில் இனிமேல் ஆதார் அப்டேட்களுக்கு ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்த படியே அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்யலாம். இதனால் இனி சேவை மையத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

ஆதார் கார்டு அப்டேட்:

இந்திய நாட்டை பொறுத்த வகையில் ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது. நாட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ள அடையாள சான்றுகளில் ஒன்றாக ஆதார் கார்டு வந்து விட்டது. ஒரு புதிய பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய, புதிய சிம் கார்டை வாங்குதவற்கும் அல்லது கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பரிசோதனைகளை செய்ய என இந்திய குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கு, புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்கவும் ஆதார் கார்டு மட்டுமே பயன்படுகிறது.

இந்தியாவில் LPG சிலிண்டர் மானியம் – மத்திய அரசு ஆலோசனை!

இந்நிலையில் ஆதார் அப்டேட்டுகளுக்கு இனிமேல் ஆதார் மையத்திற்கு செல்லத் தேவையில்லை. அதனை இப்பொழுது வீட்டில் இருந்த படியே ஒரு அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்யலாம். இதன் மூலம் சேவை மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கலாம். ஆதார் கார்டில் இருக்கும் 12 டிஜிட் நம்பரை நினைவில் கொள்வது மிகவும் அவசியம். அதே போல e-Aadhaar-ஐ டவுன்லோட் செய்வதற்கான மற்றொரு வழி, என்ரோல்மென்ட் ப்ராசஸின் போது வழங்கப்பட்ட 28 டிஜிட் குறியீடான என்ரோல்மென்ட் ஐடியை பயன்படுத்தியும் பெறலாம். ஆனால் UID மற்றும் Enrolment ID ஆகிய இரண்டையும் மறந்து விட்டால் தங்களின் e-Aadhaar யை டவுன்லோட் செய்வது எவ்வாறு என்பதையும் பார்ப்போம்.

புதிய ஆதார் என்ரோல்மெண்ட், பெயர் அப்டேட், முகவரி அப்டேட், மொபைல் நம்பர் அப்டேட், மின்னஞ்சல் ஐடி அப்டேட், பிறந்த தேதி அப்டேட், பாலினம் அப்டேட், பயோமெட்ரிக் அப்டேட் ஆகியவற்றை செய்ய ஆன்லைன் மூலமாக அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு https://uidai.gov.in என்ற வெப்சைட்டில் செல்லவும். ‘my aadhaar’ என்பதை கிளிக் செய்து ‘Book an appointment’ என்ற வசதியை தேர்ந்தெடுக்கவும். அடுத்ததாக தங்கள் நகரம் மற்றும் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும். சந்திப்பை பதிவு செய்ய ’proceed’ என்பதைக் கிளிக் செய்யவும். மொபைல் எண்ணை உள்ளிட்டு, ‘New aadhaar’ அல்லது ‘aadhar update’ பட்டனை கிளிக் செய்யவும். கேப்ட்சாவை உள்ளிட்டு, ’Generate OTP’ என்பதை கிளிக் செய்யவும். அடுத்ததாக OTP நம்பரை பதிவிட்டு ‘verify’ என்பதை கிளிக் செய்யவும். ஆவணங்களுடன் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முகவரி விவரங்களை உள்ளிடவும். டைம் ஸ்லாட்டைத் தேர்ந்தெடுத்து ’next’ என்பதை கிளிக் செய்தால் அப்பாயிண்ட்மெண்ட் புக் ஆகிவிடும். அந்த தேதியில் சென்று உங்களது அப்டேட் வேலையை முடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!