ரேஷன் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு – ஆதாருடன் இணைப்பு! முழு விபரங்கள் இதோ!

0
ரேஷன் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு - ஆதாருடன் இணைப்பு! முழு விபரங்கள் இதோ!
ரேஷன் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு - ஆதாருடன் இணைப்பு! முழு விபரங்கள் இதோ!
ரேஷன் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு – ஆதாருடன் இணைப்பு! முழு விபரங்கள் இதோ!

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் கீழ் இனி பயனர்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை எளிதாக இணைத்துக்கொள்ள முடியும். இதற்கான முழு செயல்முறையையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் இணைப்பு

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள முக்கிய அடையாள ஆவணமான ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகள் பல வகையான சேவைகளுக்கு பயன்படுகிறது. இதில் ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை பொருத்தளவு மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும், அடையாள ஆவணமாகவும் பயன்படுகிறது. இப்படி இருக்க ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்களை ஒரே ஆப் மூலம் மத்திய அரசாங்கம் ஒன்றிணைத்துள்ளது.

TNPSC தேர்வெழுதவுள்ளோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் குறித்து அதிகாரபூர்வ விளக்கம்!

அதாவது மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேரா ரேஷன் செயலி மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை எந்தவொரு மாநிலத்திலும் சென்று பெற்று கொள்ள முடியும். மேலும் ரேஷன் கடைகளை கண்டறிவது, பொருட்களின் விவரங்களை அறிந்து கொள்வது உள்ளிட்ட பல சேவைகள் இந்த இத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்படுகின்றன. இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள ஒவ்வொருவரும் தங்களது ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைத்திருக்க வேண்டும்.

இந்த வழிமுறைகளை ஆன்லைன் மூலம் எளிதாக மேற்கொள்ளும் வகையில் கீழே சில வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, ஆன்லைனில் ஆதார் அட்டையை இணைக்க,

  • முதலில்  uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • இப்போது Start Now என்பதைக் கிளிக் செய்க.
  • இங்கே உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகிய தகவல்களை நிரப்ப வேண்டும்.
  • பிறகு Ration Card Benefit என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
  • அதை பூர்த்தி செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அந்த OTP ஐ உள்ளிட்டால், உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியை பெறுவீர்கள்.
  • இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.
ஆப்லைனில் இணைக்க:

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை அருகில் இருக்கும் ரேஷன் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் மையத்தில் செய்து கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!