தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

0
தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
தமிழகம் உட்பட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

தமிழகம், கர்நாடகா, கேரளா உட்பட 6 மாநிலங்களில் நிலவி வரும் கொரோனா பரவல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி 6 மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 16) காலை 11 மணியளவில் காணொளி வாயிலாக நடைபெறுகிறது.

பிரதமர் ஆலோசனை

கொரோனா 2 ஆம் அலை அச்சமானது தற்போது படிப்படியாக நீங்கி வருகிறது. அதாவது கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது குறிப்பிட்ட நாட்களுக்குள்ளாக அதிவேகமாக பரவியது. இதனால் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நோய் பாதிப்பானது அதிகமாகி, மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு நாளும் புதிய பாதிப்புகள் லட்சங்களை தாண்டி பதிவு செய்யப்பட்டு வந்தது.

இன்று முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு – பக்தர்களுக்கு அனுமதி!

இதனிடையே தான் மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பல வகையான நோய் தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தற்போது கடந்த சில வாரங்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. அதே போல தமிழகத்திலும் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது வெகுவாக குறைந்து தற்போது 3 ஆயிரத்துக்கும் கீழாக நோய் தொற்று பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலுள்ள தற்போதைய கொரோனா நிலையை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டு வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் நேற்று வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த 8 முதல்வர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். தற்போது தமிழகம், கேரளா, கர்நாடகா, ஒடிஷா, மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேஷ் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஜூலை 16) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொளி வழியாக பிரதமருடன் கலந்துரையாட இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here