PMNAM Mela பிரதான் மந்திரி அப்ரண்டிஸ்ஷிப் திட்டம் 2022 – விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன் !

0
PMNAM Mela பிரதான் மந்திரி அப்ரண்டிஸ்ஷிப் திட்டம் 2022 - விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன் !
PMNAM Mela பிரதான் மந்திரி அப்ரண்டிஸ்ஷிப் திட்டம் 2022 - விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன் !
PMNAM Mela பிரதான் மந்திரி அப்ரண்டிஸ்ஷிப் திட்டம் 2022 – விண்ணப்பிக்கும் எளிய வழிமுறைகளுடன் !

பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா (PMNAM 2022) ஆனது நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எலக்ட்ரிக்கல் வேலை, மெக்கானிக் வேலை, வெல்டிங், பியூட்டிஷியன்கள், ஹவுஸ் கீப்பிங் போன்ற 500 க்கும் மேற்பட்ட பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளா மூலம் பயனடைய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ITI டிப்ளமோ / டிகிரி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த பயிற்சி மேளாவில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி திட்டத்தின் முடிவில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளாவில் கலந்துகொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது கட்டாயமானதாகும். பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளாவிற்கு விண்ணப்பிக்கும் முறை கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

PMNAM Mela மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது Resume, மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்கள், புகைப்படம், அடையாள அட்டை (ஆதார் அட்டை/ஓட்டுநர் உரிமம்) போன்ற ஆவணங்களுடன் தேவையான ஆவணங்களையும் எடுத்து சென்று விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பயிற்சி மேளாவில் தேர்வாகும் விண்ணப்பதாரர்ககளுக்கு அரசு உதவி தொகை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் apprenticeshipindia.gov.in எனும் அதிகாரப்பூர்வ தளத்தை அணுகவும்.
  • அதில் “registration ” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பின் Candidates Registration என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • அதன்பின் உள்ளே சென்று விண்ணப்பிக்க விரும்பும் பணியை தேர்வு செய்து விண்ணப்பிக்கவும்.
  • இறுதியாக பூர்த்தி செய்து, சரிபார்த்து பின் submit என்பதை கிளிக் செய்யவும்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பயிற்சி மற்றும் நடைமுறை திறன் தொகுப்புகள் மூலம் முதலாளிகள் தங்கள் திறனைக் கண்டறிந்து மேம்படுத்துவதற்கு உதவுவதுடன், அதிக பயிற்சியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிறுவனங்களை ஊக்குவிப்பது என அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மேளா இறுதியில் மாதாந்திர கட்டணமாக மாற்றப்படும் மற்றும் பயிற்சியாளர்கள் அரசாங்க அளவுகோல்களுக்கு இணங்க மாதாந்திர உதவித்தொகையைப் பெற முடியும், அது அமைச்சகத்தின் படி ஆன்லைன் முறையில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி தேசிய பயிற்சி மேளாவானது இந்தியா முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி கர்நாடகா மாநிலத்தில் ஜூலை 12ம் தேதி அன்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 18ம் தேதியன்றும் மத்தியப் பிரதேசத்தில் ஜூலை 20 முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என்றும் பீகார் மாநிலத்தில் ஜூலை 25ம் தேதி அன்றும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!