பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் – கூடுதல் நிதிஒதுக்கீடு அறிவிப்பு!!!

0
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் கூடுதல் நிதிஒதுக்கீடு அறிவிப்பு
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் கூடுதல் நிதிஒதுக்கீடு அறிவிப்பு
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் – கூடுதல் நிதிஒதுக்கீடு அறிவிப்பு!!!
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டுவோருக்கு தமிழக அரசு சார்பாக ரூபாய் 1805 கோடி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்:

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் ஏழை எளியோர் அனைவருக்கும் வீடுகள் கட்டும்போது அவர்களுக்கு கட்டுமான பணிக்காக அரசு சார்பாக 1லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் உள்ள பயனாளர்களுக்கு வேறு எங்கும் சொந்தமாக வீடுகள் இருக்கக்கூடாது எனவும், மேலும் அரசின் வேறு எதாவது திட்டத்தின் பயனாளராக இருக்க கூடாது எனவும் வழிமுறைகள் உள்ளது.

CBSE பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? – கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை!!!

தற்போது கட்டுமான பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனாவால் மக்கள் வருமான பற்றாக்குறை போன்றவற்றால் தமிழக அரசு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகட்டும் பயனாளர்களுக்கு 1805கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் சுமார் 2.50 லட்சம் பயனாளர்கள் பயனடைவார்கள் என குறிப்பிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் உள்ள வீடுகளின் மேற்கூரை அமைக்க வழங்கப்பட்டு வந்த ரூ.50,000ஐ உயர்த்தி ரூ.1.20 லட்சமாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும் அலகு தொகை ரூ.1.70 லட்சத்தில் இருந்து ரூ.2.40 லட்சமாக உயர்த்தப்படுகிறது என முதல்வர் கூறினார். 2016-17 முதல் 2019-20ஆம் ஆண்டுவரை இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 968 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4,01,848 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்பு குறித்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி உதவியால் கட்டி முடிக்காமல் உள்ள வீடுகள் கட்டி முடிக்கப்படுவதுடன், தாங்களே கட்ட வசதியில்லாத பயனாளிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் உதவியோடு கட்டி முடிக்க உத்தரவிடப்படும். என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!