தமிழகத்தில் நாளை (டிச.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு, குனியமுத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் மின்தடை ஏற்படும் என்றும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு மின்சார துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் மின் தொடர்பான புகார்கள் தற்போது 2 நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்களின் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்படுகிறது.

டிச.30 முதல் ஜன.2 வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

இந்த மின்தடை குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் முன்னதாகவே தகவல் தெரிவிக்கின்றனர். மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் மின் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு தடையின்றி மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு, குனியமுத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (23.12.2021) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஆா்கஸ் பீடா், பாரதி காலனி, எஸ்.எல்.வி.காம்ப்ளக்ஸ் ரோடு, வி.என்.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அகிலாண்டேஸ்வரி நகா், சின்னசாமி லேஅவுட், எல்லை தோட்டம், ஆா்கஸ் நகா், ஹோப் காலேஜ், அவினாசி சாலை ஒரு பகுதி, வி.கே.ரோடு, அண்ணா நகா், மேத்தா லேஅவுட், கல்லூரி நகா் ஒரு பகுதி, பாலன் நகா் ஒரு பகுதி, பாரதி காலனி, பாரதி நகர், ஆவாரம்பாளையம் ஒரு பகுதி, இந்திரா நகா், காந்திமாநகா், வி.ஜி.ராவ் நகா், பாரதி நகா், கே.கே.நகா், வரதராஜ நகா், திருமகள் நகா், சந்திரகாந்தி நகா், துளி அப்பார்ட்மெண்ட், கருணாநிதி நகா், பி.எஸ்ஜி. மருத்துவமனை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

விழுப்புரத்தில் டிச.24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மேலும் புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒரு பகுதி, பி.கே.புதூா், கோவைப்புதூா், நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூா், இராமசெட்டிபாளையம், ஆறுமுகக்கவுண்டனூா், பேரூர் செட்டிபாளையம், பேரூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here