தமிழகத்தில் நாளை (டிச.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதன் காரணமாக அவினாசி, சேவூர் பகுதியில் நாளை (டிச.27) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடையை பல்வேறு பகுதிகளில் மின் வாரியம் அறிவித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக தவிர்க்க முடியாத விபத்துகள் ஏற்படுவது குறைகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக ஏராளமான விபத்துகள் ஏற்படுவதும் குறைகிறது. அதனால் தமிழக அரசு மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை சரி செய்து வருகிறது. இதனால் மின் விபத்துகள் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகளும் குறைகிறது.

தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – நாளை கடைசி தேதி!

அதனை தொடர்ந்து நாளை சேவூர், வடுகபாளையம், தெக்கலூர் ஆகிய துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் தெக்கலூர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான வடுகபாளையம், வினோபா நகர், ராயர்பாளையம், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், சாவக்காட்டுபாளையம், சேவூர், குளத்துப்பாளையம், சென்னியாண்டவர் கோவில், விராலிகாடு, தண்ணீர்பந்தல், பள்ளக்காடு, தண்டுக்காரன்பாளையம், வளையபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் சேவூர், வடுகபாளையம் துணை மின் நிலையங்களால் மின்சாரம் பெறும் பகுதிகளான சேவூர், அசநல்லிபாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதூர், பாப்பான்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சைத்தாமரைக்குளம், சாவக்காட்டுப்பாளையம், சாலைப்பாளையம், நடுவச்சேரி, கருக்கன் காட்டுப்புதூர், தளிஞ்சிபாளையம், மாரப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

திருப்பதிக்கு குடும்பத்துடன் தரிசனம் செல்ல உள்ளோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அத்துடன் வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சைத்தாமரைக்குளம், பிச்சாண்டம்பாளையம், ஒட்டபாளையம், ஓலப்பாளையம் மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளிலும் நாளை (டிச.27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என்றும் மின்வாரிய செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், விஜயஈஸ்வரன் அவர்கள் அறிவிப்பை தெரிவித்துள்ளார். அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் உடனடியாக துணை மின்நிலையங்களில் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here