தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (நவ.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளின் காரணமாக மின் தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாளை (நவ.27) மயிலாடுதுறை, மங்கைநல்லூரில் மின்தடை என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது. அத்துடன் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக இருக்கிறது. மேலும் சாலைகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. அத்துடன் மின் இணைப்பு கம்பிகளில் பிளவு ஏற்பட்டு சாலைகளில் ஏராளமான இடங்களில் விழுந்துள்ளன. இதனால் சாலைகளில் மக்கள் பாதுகாப்பாக மிக கவனத்துடன் நடக்க வேண்டும்.

தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

அதனால் இரவு நேரங்களில் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆதலால் தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்கின்றன. இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் செலவிட்டு மின் பராமரிப்பு பணிகளை தொடர்சசியாக முடித்து வருகின்றன. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதனால் தமிழக அரசு மாதந்தோறும் மின் தடை அறிவிப்பை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறது. இதன் விளைவாக நாளை மயிலாடுதுறை, மங்கைநல்லூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

இதனால் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூா், வடகரை, சோழசக்கரநல்லூா், மங்கைநல்லூா், ஆனந்ததாண்டவபுரம், வழுவூா், கிளியனூா், மணக்குடி போன்ற பகுதியிலும் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் வை.முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here