ஜூலை 29ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 29.07.2021ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் மூலம் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் வருகிற ஜூலை 29ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழக அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு – பக்தர்கள் கவனத்திற்கு!
அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, ஆத்திபட்டி, பெரியபுளிபட்டி, ஆத்திபட்டி, தெற்கு தெரு, மலையரசன் கோவில் பட்டி, சிட்டி பஜார், திருநகரம், எம் எஸ்.பஜார் புதிய பேருந்து நிலைய பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
இந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அருப்புக்கோட்டை பகுதியில் மேற்குறிப்பிட்ட இடங்களில் ஜூலை 29ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.