ஆகஸ்ட் முதல் ATM பணபரிவர்த்தனை கட்டணம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

0
ஆகஸ்ட் முதல் ATM பணபரிவர்த்தனை கட்டணம் உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ஆகஸ்ட் முதல் ATM பணபரிவர்த்தனை கட்டணம் உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ஆகஸ்ட் முதல் ATM பணபரிவர்த்தனை கட்டணம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்தியாவில் ATM இயந்திரங்களின் பணபரிவர்த்தனை கட்டணம் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணபரிவர்த்தனை அல்லாத பிற சேவைக்கு ATM இந்திரத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ATM பணபரிவர்த்தனை கட்டணம்:

இந்தியாவில் ATM இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது அதற்கான கட்டணம் சேமிப்பு தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த கட்டணத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்து அறிவிக்கிறது. அதன்படி தற்போது 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ATM இயந்திரங்களின் பணபரிவர்த்தனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 5 முறை மட்டும் பணம் எடுத்தால் கட்டணம் கிடையாது. அதற்கு மேல் ATM பணபரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Instagram பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரீல்ஸ் காலநேரம் அதிகரிப்பு!

இந்த கட்டணம் தற்போது 15 இல் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ATM இயந்திரங்கள் பராமரிப்பு செலவினங்களுக்காக இந்த கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் பண பரிவர்த்தனை அல்லாத பிற சேவைக்கு ATM இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான கட்டணம் 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தவிர பிற வங்கிகளில் மாதத்தில் மூன்று முறைக்கு மேல் ATM இயந்திரங்களில் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ரிசர்வ் வங்கிகள் அறிவித்த ATM பண பரிவர்த்தனை கட்டண உயர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இதர வங்கிகளில் 3 முறைக்கு மேல் மேற்கொள்ளும் பணபரிவர்த்தனை கட்டணம் 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த வருடம் ஜனவரி முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here