தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜன.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.25) மின்தடை என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தில் ஏற்படும் தவிர்க்க முடியாத மின் விபத்துக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். அதனால் மின் கோளாறு மற்றும் மின் கசிவு காரணமாக ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை குறைகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகளை செய்து முடிக்கும் வரை மின் விநியோகம் குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் நிறுத்தி வைக்கப்படும்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

இதனை தொடர்ந்து நாளை விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் குறிப்பிட்ட சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை துணை மின் நிலையத்தில் மின்தடை ஏற்படும் என்றும் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Post Office இல் மாதம் ரூ.2000 சேமிப்பதன் மூலம் ரூ.1.39 லட்சம் பெறலாம் – சிறந்த சேமிப்பு திட்டம்!

மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான மல்லி, மல்லி புதூர், நாக பாளையம், மாயத்தேவன் பட்டி, அப்பநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பை நாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், சித்தாலம்புத்தூர், ராஜா நகர், சிவா நகர், கார்த்திகை மற்றும் அதனை சுற்றிள்ள பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இங்குள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here