Post Office இல் மாதம் ரூ.2000 சேமிப்பதன் மூலம் ரூ.1.39 லட்சம் பெறலாம் – சிறந்த சேமிப்பு திட்டம்!

0
Post Office இல் மாதம் ரூ.2000 சேமிப்பதன் மூலம் ரூ.1.39 லட்சம் பெறலாம் - சிறந்த சேமிப்பு திட்டம்!
Post Office இல் மாதம் ரூ.2000 சேமிப்பதன் மூலம் ரூ.1.39 லட்சம் பெறலாம் - சிறந்த சேமிப்பு திட்டம்!
Post Office இல் மாதம் ரூ.2000 சேமிப்பதன் மூலம் ரூ.1.39 லட்சம் பெறலாம் – சிறந்த சேமிப்பு திட்டம்!

மத்திய அரசு அனைத்து தர மக்களும் சேமிக்கும் வகையில் அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்றான தொடர்வைப்பு நிதி திட்டம் குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.

சேமிப்பு திட்டம்:

நாடு முழுவதும் வங்கிகள் மற்றும் ஸ்மால் பைனான்ஸ் என பல்வேறு சேமிப்புகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலானோர் தங்களது சேமிப்பை அஞ்சல் துறையில் தொடங்கி வருகின்றனர். ஏனெனில் அஞ்சல் துறை சேமிப்பு என்பது மத்திய அரசின் மிகவும் பாதுகாப்பான சேமிப்பு. எனவே மக்கள் பணத்திற்கான பாதுகாப்பு கருதி சேமிப்புக்கு அஞ்சல் துறையை தேர்வு செய்து வருகின்றனர். இவ்வாறு மக்கள் அஞ்சல் துறையை தேர்வு செய்வதால் மத்திய அரசு அஞ்சல் துறையின் கீழ் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசுக்கு முக்கிய கோரிக்கை!

அவ்வாறு செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் தொடர்வைப்புநிதி திட்டம் (RD) ஆகும். இந்த திட்டத்தில் மாதம் ரூ.100 முதல் சேமிப்பை தொடங்கலாம் என்பதால் இந்த திட்டம் சாமானிய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடர்வைப்பு நிதி திட்டத்திற்கான காலம் 5 ஆண்டுகள் ஆகும். அதற்கு பிறகு திட்டத்தை நீட்டிக்க விரும்பினால் விண்ணப்பத்தினை கொடுத்து நீட்டித்து கணக்கை தொடரலாம். அதனை தொடர்ந்து வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி வழங்குவதால் இந்த திட்டம் பெரும்பாலானோரால் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டின் சிறந்த பௌலராக பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி தேர்வு – ICC அறிவிப்பு!

இதுவரை தொடர்வைப்பு நிதி திட்டத்திற்கு 5.8% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மாதந்தோறும் தொடரும் சேமிப்பு இடையில் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். அதாவது ஒரு மாதம் பணம் கட்டவில்லை என்றால் அடுத்த முறை ஒவ்வொரு 5 ரூபாய்க்கும் 5 பைசா என 100 ரூபாய்க்கு 5 ரூபாய் என அபராதம் செலுத்த வேண்டும். தொடர்ந்து 6 மாதங்களுக்கு பணம் செலுத்தவில்லை என்றால் அந்த கணக்கை தொடர முடியாது. அதனை தொடர்ந்து பணத்தை முன்கூட்டியே செலுத்துவதால் தள்ளுபடி சலுகை வசதியும் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!