அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஆகஸ்ட் 16 கடைசி நாள்!

0
அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஆகஸ்ட் 16 கடைசி நாள்!
அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஆகஸ்ட் 16 கடைசி நாள்!
அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – ஆகஸ்ட் 16 கடைசி நாள்!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என விருதுநகர் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் கே.ஏ. கல்யாண வரதராஜன் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் காப்பீடு முகவர்:

நாடு முழுவதும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கி வரும் இன்சூரன்ஸ் திட்டங்களை போலவே, அஞ்சலகமும் ஆயுள் காப்பீடுகளை வழங்கி வருகின்றது. இது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் என்ற இரு வகைகளில் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், வேலை இல்லாமல் தேடி கொண்டிருப்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள் ஆகியோர் காப்பீடு முகவராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கான கல்வித்தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வயது 18 முதல் 50 வரை இருக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு – பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு!

இந்த பணிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு செய்யும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்படுபவர்கள், ரூ.5000 கே.வி.ச் பி பத்திரம் அல்லது தங்களது பெயரில் ஏதேனும் ஒரு அஞ்சலகத்தில் முதலீடு செய்ய வேண்டும். மேலும் அவர்களது உரிமம் முடிவடையும் போது பத்திரத்தில் முதலீடு செய்த பணத்தை திட்டத்திற்குரிய வட்டியுடன் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை அருகில் உள்ள அஞ்சலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்திய ரயில்வே இலவச Wifi சேவைகள் வழங்கும் திட்டம் நிறுத்தம் – அமைச்சர் தகவல்!

பின்னர் உங்களது புகைப்படத்துடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், அத்துடன் பான் அட்டை நகல், ஆதார் அட்டை மற்றும் கல்விச் சான்று நகல்களை இணைத்து, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் , விருதுநகர் அஞ்சல் கோட்டம், விருதுநகர் என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 63802 62727 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!