தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளை நேர்காணல்!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - நாளை நேர்காணல்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - நாளை நேர்காணல்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – நாளை நேர்காணல்!

சென்னையில் உள்ள மத்திய அஞ்சல் அலுவலக கோட்டத்தில் நாளை (03.11.2021) கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்குப் புதிய முகவர்கள் ஆகிய பணிகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.

அஞ்சல் முகவர் பணி:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் மாநிலம் இயல்பு நிலை நோக்கி திருப்பி கொண்டிருக்கும் நிலையில் வேலையிழந்தோர் வேலைவாய்ப்புகளை தேடி வரும் இந்த நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை தொடர்ந்து அஞ்சல் துறையும் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள மத்திய அஞ்சல் அலுவலக கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனை ஆகிய பணிகளுக்கு முகவர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது.

தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் ‘கட்’ – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!

இந்த அஞ்சல் கோட்ட முகவர் பணியில் சேர விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சுயதொழில் செய்பவர்கள், முன்னாள் ராணுவத்தினர், வேலையில்லா இளைஞர்கள், காப்பீடு ஆலோசகர்கள், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் போன்றோர் இப்பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.

வங்கி பொது தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

நேர்முகத் தேர்வு சென்னையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிசம்பர் 3ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. நேர்காணலுக்கு வருவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிடச்சான்று, கல்வித் தகுதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். நேர்காணலில் பின் முகவர் பணிக்கு தேர்வு செய்யபடுபவர்கள் 5000 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பண பாதுகாப்பு பத்திரம் வழங்க வேண்டும் என்று மத்திய கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here