பொங்கல் பண்டிகை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

0
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு 10 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு – இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

தெற்கு ரயில்வே வாரியம் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடும் நபர்களுக்காக 10 சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

பொங்கல் சிறப்பு ரயில்கள்:

தமிழகத்தில் பொங்கல் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது. மேலும், பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறைகள் அளிக்கப்படுவதால் கல்வி மற்றும் பணி நிமித்தமாக வெளியூர்களில் தங்கயிருக்கும் மற்றும் குடும்ப வாசிகள் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்புவார்கள். இதற்காக கூடுதல் எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், வரும் 2023 பொங்கல் பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே வாரியம் சென்னையில் இருந்து 10 சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த ரயில்களின் விவரங்களை வெளியிட்டு, இதற்கான டிக்கெட் முன்பதிவை டிசம்பர் 29ம் தேதியான இன்று காலை 8 மணி முதல் துவங்கியுள்ளது. இறுதி நேர அவசர பயணத்தை தவிர்க்கும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் இப்போதே முன்பதிவை செய்து கொள்வது நல்லது.

தாம்பரம்-திருநெல்வேலி:
  • ஜனவரி 12ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் தாம்பரம் -திருநெல்வேலி (06021) சிறப்பு ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
  • இதே ரயில், மறுமார்கமாக ஜனவரி 13ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சிறப்பு ரயில் (06022) சென்னை எழும்பூர் சேரும்.

தமிழக மக்களே கவனமா இருங்க.. டிச.31 மின்தடை அறிவிப்பு.. உங்கள் பகுதியுமா? உடனே செக் பண்ணுங்க!

Exams Daily Mobile App Download
தாம்பரம்-நாகர்கோவில்:
  • ஜனவரி 13ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்-நாகர்கோவில் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் வந்து அடையும்.
  • மேலும், மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி மாலை 5.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06042) மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்து அடையும்.
தாம்பரம்-திருநெல்வேலி:
  • ஜனவரி 16ம் தேதி இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06057) மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை சேரும்.
  • மறுமார்க்கமாக ஜனவரி 17ல் திருநெல்வேலியில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

New Offer on SSC Online Classes 

எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல்:
  • ஜனவரி 12ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து நள்ளிரவு 11.20 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் -டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும்.
  • இதே போல், மறுமார்கமாக ஜனவரி 13ம் தேதி மதியம் 2.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் சிறப்பு ரயில் (06046) மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு எர்ணாகுளத்தில் சேர உள்ளது.
கொச்சுவேலி-தாம்பரம்:
  • ஜனவரி 17 ம் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும் கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் (06044) மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
  • மறுமார்க்கமாக ஜனவரி 18 ல் காலை 10.30 மணிக்கு தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (06043) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலியை சென்று சேரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!