கொட்டித்தீர்க்கும் மழை பள்ளிகளுக்கு விடுமுறை- புதுச்சேரி அரசு அறிவிப்பு!!!

0
கொட்டித்தீர்க்கும் மழை பள்ளிகளுக்கு விடுமுறை- புதுசேரி அரசு அறிவிப்பு!!!

கொட்டித்தீர்க்கும் மழை பள்ளிகளுக்கு விடுமுறை- புதுச்சேரி அரசு அறிவிப்பு!!!

குமாரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுசேரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் தொடர் மழை காரணமாக புதுசேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கி 6 மாதம் காலம் முடிவடைந்த நிலையில் அரசு வகுத்த கட்டுப்பாடுகளின் படி கடந்த அக்டோபர் மாதம் முதல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தொடர்மழை பெய்துவருவதால் இன்று ஒரு நாள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும்  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்க வாய்ப்புக்கள் இல்லை – கல்வித்துறை அறிவிப்பு!!

மேலும் இன்று இறுதியாண்டு பயிலும்  இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு காரணமாக கல்லூரிகள் திட்டமிட்டபடி செயல்படும் என புதுசேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here