கடைகளில் QR கோட் பயன்படுத்தும் உரிமையாளர்கள் கவனத்திற்கு – காவல்துறை எச்சரிக்கை!
சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணபரிவர்த்தனைகளுக்கு QR கோட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதால் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
QR கோட்:
கொரோனா பரவலால் ஆன்லைன் மூலம் தற்போது QR கோட் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் நாகரிகம் அதிகரித்துள்ளது. கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு QR கோட் மூலம் பணம் செலுத்தி வருகின்றனர் மக்கள். இதனை பயன்படுத்தி பழைய மகாபலிபுரம் சாலையில் சிறிய கடைகளின் வெளிப்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த QR கோடை மாற்றி இளைஞர் ஒருவர் மோசடி செய்துள்ளார். இதனை தொடர்ந்து மோசடி செய்த இளைஞர் போலீசால் கைது செய்யப்பட்டார்.
தி எம்பயர்’ தொடருக்கு வலுக்கும் எதிர்ப்பு – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Uninstall Hotstar!
போன்பே நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பழைய மகாபலிபுரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று போன்பே மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் QR கோடை பயன்படுத்துமாறு கடைக்காரர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். சில நாட்களில் வேலையில் இருந்து விலகிய அவர் தனது நண்பர்களின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட QR கோடுகளை கடைகளுக்கு வெளியே உள்ள QR கோடுகளுக்கு மேல் ஓட்டியுள்ளார்.
TN Job “FB
Group” Join Now
சிறு கடைகள் என்பதால் வரும் 10, 20 ரூபாய் கடைக்காரர்கள் சரி பார்ப்பதில்லை. அதனை தொடர்ந்து வேறு கடைகளில் இந்த QR கோடுகளை ஓட்டுவது போன்று மோசடி செய்துள்ளார். அவரது நண்பர்களுக்கு தெரியாமல் அவர்கள் வாங்கி அக்கவுண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக உங்கள் நிறுவனத்தில் ஒட்டப்பட்டிருப்பது உங்களுடைய QR கோட் தானா என்பதை சரிபார்த்து கொள்ளவும் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.