தி எம்பயர்’ தொடருக்கு வலுக்கும் எதிர்ப்பு – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Uninstall Hotstar!

0
தி எம்பயர்' தொடருக்கு வலுக்கும் எதிர்ப்பு - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Uninstall Hotstar!
தி எம்பயர்' தொடருக்கு வலுக்கும் எதிர்ப்பு - ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Uninstall Hotstar!
தி எம்பயர்’ தொடருக்கு வலுக்கும் எதிர்ப்பு – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Uninstall Hotstar!

உலகின் பல லட்ச சந்தாதாரர்களை கொண்டுள்ள ஹாட்ஸ்டார் ஆன்லைன் தளத்துக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்த இணையத்தில் வெளியாகியிருக்கும் ‘தி எம்பயர்’ சீரிஸுக்கு எதிராக புகார் அளித்து வந்த ரசிகர்கள் ‘ஹாட்ஸ்டார் அன்இன்ஸ்டால்’ என்ற பதிவை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஹாட்ஸ்டார் சீரிஸ்

முன்னணி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான ஹாட்ஸ்டார் ‘தி எம்பயர்’ என்ற வெப் சீரிஸை ஒளிபரப்பாக்கி வருகிறது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் நிகில் அத்வானி தயாரித்துள்ள இந்த தொடரில் நடிகைகள் ஷபானா ஆஸ்மி, டினோ மோரியா, டிராஷ்டி தாமி, நடிகர்கள் குணால் கபூர், ஆதித்யா சீல், ராகுல் தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைக்கதை பாலிவுட் சினிமாவுக்குரிய வழக்கமான பிரம்மாண்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

அதிக சிசிடிவி கேமரா உள்ள நகரங்கள் – முதலிடத்தில் டெல்லி! போர்ப்ஸ் பத்திரிக்கை ரிப்போர்ட்!

எழுத்தாளர் அலெக்ஸ் ரூதர்ஃபோர்டு எழுதிய ‘எம்பயர் ஆஃப் தி மொகல்: ரைடர்ஸ் ஃப்ரம் தி ரைட்ஸ்’ என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இஸ்லாமிய படையெடுப்பாளரான பாபரை உயர்த்தியிருப்பதாக கூறிய ரசிகர்கள், அதன் டிரெய்லர் இணையத்தில் வெளியானது துவங்கி தொடருக்கு எதிரான தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இருப்பினும், ‘தி எம்பயர்’ தொடருக்கு எதிரான புகார்களை ஹாட்ஸ்டார் நிராகரித்து அந்த தொடரை வெளியிட்டுள்ளது.

இதனிடையே தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 ன் கீழ் பெறப்பட்ட புகார்களுக்கு, இந்தத் தொடர் பாபரை மகிமைப்படுத்தவில்லை என்று கூறி அவை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொடருக்கு எதிரான கருத்துக்கள் தற்போது வலுத்துக்கொண்ட போகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பலரும் ‘தி எம்பயர்’ சீரிஸுக்கு எதிராக ‘தி எம்பயர்’ தொடருக்கு வலுக்கும் எதிர்ப்பு – ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Uninstall Hotstar என்ற பதிவுகளை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அதாவது, இந்தியாவை அழித்து கொள்ளையடித்த, இந்துக்களை கொன்ற பாபரின் சகிப்புத்தன்மையற்ற படையெடுப்பை ‘தி எம்பயர்’ தொடர் புகழ்கிறது என்றும் பாபர் குறித்த ‘தி எம்பயர்’ தொடர் மீதான புகார்களை ஹாட்ஸ்டார் நிராகரித்துள்ளது என்றும் ரசிகர்கள் ஹாட்ஸ்டார் செயலியை அன்இன்ஸ்டால் செய்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக ஹிந்தியில் நடிகை சமந்தா நடித்திருந்த ‘தி பேமிலி மேன் 2’ என்ற தொடரும் இது போன்ற எதிர்ப்புகளை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!