தமிழக காவல்துறையின் “காவல் கரங்கள்” திட்டம் – “ஸ்காச் தங்க விருது” பெற்று சாதனை!

0
தமிழக காவல்துறையின் “காவல் கரங்கள்” திட்டம் - “ஸ்காச் தங்க விருது
தமிழக காவல்துறையின் “காவல் கரங்கள்” திட்டம் - “ஸ்காச் தங்க விருது" பெற்று சாதனை!
தமிழக காவல்துறையின் “காவல் கரங்கள்” திட்டம் – “ஸ்காச் தங்க விருது” பெற்று சாதனை!

தமிழகத்தில் ஆதரவற்றவர்களுக்கு உதவும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை கடந்த ஆண்டு “காவல் கரங்கள்” என்ற திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டம் தற்போது “ஸ்காச் தங்க விருது” வென்று சாதனை படைத்துள்ளது.

காவல் கரங்கள்:

தமிழகத்தில் சாலையோரங்களில் ஆதரவின்றி தவிக்கும் முதியவர்கள், பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்கள் ஆகியோர்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல்துறை கடந்த 2022ம் ஆண்டு “காவல் கரங்கள்” என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் மூலம் ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சை போன்ற வசதிகள் அளிக்கப்பட்டது. இந்த திட்டத்தை தமிழக காவல்துறை சிறப்பாக செயல்படுத்தி வருவதை பாராட்டி முதல்வர் கடந்த வருடம் தமிழக முதல்வர் ஆளுமை’ விருது வழங்கினார். அதன் தொடர்ச்சியாக தற்போது “காவல் கரங்கள்” திட்டம் 2022ம் ஆண்டுக்கான “ஸ்காச் தங்க விருது” பெற்றுள்ளது.

தமிழகத்தில் 28ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – கலந்து கொள்ள முழு விவரங்கள் இதோ!!

காவல்துறை சார்ந்த திட்டங்கள் ஸ்காச் விருதுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்கள் சார்பாக இத்திட்டங்களுக்கு இணையவழி முறையில் ஓட்டளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதில் “காவல் கரங்கள்” திட்டம் ஸ்காச் தங்க விருதுக்கு தகுதி பெற்று காவல்துறைக்கு பெருமை சேர்ந்துள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!