தமிழகத்தில் 28ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – கலந்து கொள்ள முழு விவரங்கள் இதோ!!

0
தமிழகத்தில் 28ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - கலந்து கொள்ள முழு விவரங்கள் இதோ!!
தமிழகத்தில் 28ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - கலந்து கொள்ள முழு விவரங்கள் இதோ!!
தமிழகத்தில் 28ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – கலந்து கொள்ள முழு விவரங்கள் இதோ!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை செய்யப்படுகிறது. அந்த வகையில் வருகிற 28ம் தேதி அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இம்மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான முழு விபரம் குறித்து பார்ப்போம்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பை உருவாக்க தற்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கானோருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 28ம் தேதி அன்று அருப்புக்கோட்டையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கல்லூரியில் வருகிற 28ம் தேதி அன்று 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ , டிப்ளமோ ஆகிய படிப்பை முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

வரவிருக்கும் பிப்ரவரியில் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை – பட்டியல் இதோ!

இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை உடன் எடுத்து வர வேண்டும். இம்முகாமில் 28ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!