மாதம் ரூ.100 செலுத்தி வந்தால் ரூ. 3000 ஓய்வூதியம் – மத்திய அரசின் அசத்தலான திட்டம்!

0
மாதம் ரூ.100 செலுத்தி வந்தால் ரூ. 3000 ஓய்வூதியம் - மத்திய அரசின் அசத்தலான திட்டம்!
மாதம் ரூ.100 செலுத்தி வந்தால் ரூ. 3000 ஓய்வூதியம் - மத்திய அரசின் அசத்தலான திட்டம்!
மாதம் ரூ.100 செலுத்தி வந்தால் ரூ. 3000 ஓய்வூதியம் – மத்திய அரசின் அசத்தலான திட்டம்!

இந்தியாவில் முதியவர்களுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் எவ்வாறு சேருவது முதலீடு செய்வது குறித்த விவரங்களை பதிவில் காண்போம்.

ஓய்வூதியத் திட்டம்:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் பணி புரிபவர்களுக்கு ஓய்வு காலத்திற்கு உதவும் வகையில் அரசு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக வழங்குகிறது. அதே போல அமைப்பு சாரா துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் பிரதான் மந்திரி ஷரம் யோகி மான்தன் என்னும் திட்டம் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சேர்ந்து முதலீடு செய்பவர்களுக்கு 60 வயது ஆகும் போது மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள். இவர்களது மாத வருமானம் ரூ.15,000 மிகாமல் இருக்க வேண்டியது அவசியம். மேலும் இத்திட்டத்தில் சேர மற்றொரு நிபந்தனையும் உள்ளது. அதாவது புதிய ஓய்வு திட்டம், ஊழியர்களின், மாநில காப்பீடு கழகத் திட்டம் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆகியவற்றில் இணைந்திருக்கக் கூடாது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இத்தகைய தகுதி உடையவர்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்திற்கு சென்று இத்திட்டத்தில் சேரலாம். ஒரு வேளை ஓய்வூதியம் பெறும் நபர் இறந்தால் அந்த ஓய்வூதியத்தின் 50 சதவீதம் வாழ்க்கை துணைக்கு வழங்கப்படும். ஒரு தம்பதியர் இத்திட்டத்தில் தனித்தனியாக ரூ.100 செலுத்தி வந்தால் 60 வயதுக்கு பிறகு ஓய்வூதிய தொகையாக மாதம் ரூ.3000 என ஆண்டுக்கு ரூ.72,000 ஐ ஓய்வூதிய தொகையாக பெறலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!