நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

0
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து பல்வேறு அவதாரங்களை கொரோனா தொற்று எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது பரவி வரும் ஓமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

முழு ஊரடங்கு அமல்?

நாடு முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக கொரோனா முதல் அலை உருவானது. பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா முதல் அலை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையை தொடர்ந்து 2வது அலை உருவானது. இந்த கொரோனா 2வது அலையின் போது கொரோனா பல்வேறு அவதாரங்களை எடுத்தது அதாவது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் வகைகள் பரவ தொடங்கியது. அப்போது கொரோனா செலுத்தும் பணி தீவிரப்படுத்தபட்டு கட்டுப்பாடுகளும் பலப்படுத்தப்பட்டது.

சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அதன் பின்னர் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இவ்வாறாக கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா 2வது அலை பெருமளவு குறைந்ததன் அடிப்படையில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டது. எனினும் கொரோனா நெறிமுறைகளை முறையாக பின்பற்றி அனைவரும் நடக்கும் வகையில் அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்திற்கு முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இந்த ஓமைக்ரான் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து கொரோனா தொற்றும் வேகமெடுத்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மத்திய அரசு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு விதித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் மாநில அரசுகளும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!