விளையாட்டு வீரர்களுக்கான ‘கேல் ரத்னா விருது’ பெயர் மாற்றம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

0
விளையாட்டு வீரர்களுக்கான 'கேல் ரத்னா விருது' பெயர் மாற்றம் - பிரதமர் மோடி அறிவிப்பு!
விளையாட்டு வீரர்களுக்கான 'கேல் ரத்னா விருது' பெயர் மாற்றம் - பிரதமர் மோடி அறிவிப்பு!
விளையாட்டு வீரர்களுக்கான ‘கேல் ரத்னா விருது’ பெயர் மாற்றம் – பிரதமர் மோடி அறிவிப்பு!

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுகள் இனி ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கேல் ரத்னா விருது:

இந்திய விளையாட்டு துறைகளில் சாதனை புரிந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக ஆண்டுதோறும் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1991-1992 ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்ட இந்த விருதுகள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கும் இந்த உயரிய விருதுகள் சர்வதேச அளவில் நான்கு வருட காலப்பகுதியில் விளையாட்டு துறையில் அற்புதமான மற்றும் மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கொடுக்கப்படுகிறது.

Airtel 6GB டேட்டாவுடன் 89 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

கடந்த 2020 ஆம் ஆண்டு வரை, இந்த விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் பதக்கம், ஒரு சான்றிதழ் மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசுகள் கொடுக்கப்படுகிறது. பன்னிரண்டு உறுப்பினர்கள் கொண்ட இக்குழு ஒலிம்பிக் விளையாட்டு, பாராலிம்பிக் விளையாட்டு, ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போன்ற பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் ஒரு விளையாட்டு வீரரின் செயல்திறனை மதிப்பீடு செய்கிறது. பின்னர் குழுவின் பரிந்துரைகளை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரிடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கிறது.

TN Job “FB  Group” Join Now

இதில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுக்கான கௌரவம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2020 ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகளை ரோஹித் சர்மா (கிரிக்கெட்), வினேஷ் போகட் (மல்யுத்தம்), ராணி ராம்பால் (ஹாக்கி), மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்ட வீரர்கள் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன் படி ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவானான மேஜர் தயான் சந்த் பெயரில் இனி வரும் காலங்களில் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!