IPL சீசன் 15: RCB ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த 3 வீரர்களுக்கு ஆரஞ்ச் கேப் கிடைக்க வாய்ப்பு?

0
IPL சீசன் 15: RCB ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இந்த 3 வீரர்களுக்கு ஆரஞ்ச் கேப் கிடைக்க வாய்ப்பு?
IPL சீசன் 15: RCB ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இந்த 3 வீரர்களுக்கு ஆரஞ்ச் கேப் கிடைக்க வாய்ப்பு?
IPL சீசன் 15: RCB ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த 3 வீரர்களுக்கு ஆரஞ்ச் கேப் கிடைக்க வாய்ப்பு?

இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க இருக்கும் 15வது IPL சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை சேர்ந்த 3 முக்கிய வீரர்களுக்கு ஆரஞ்சு தொப்பி கிடைக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

RCB அணி

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் பல உலகத் தரம் வாய்ந்த வீரர்களை வைத்திருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியால் இதுவரை ஒரு பட்டத்தை கூட வெல்ல முடியவில்லை. இருப்பினும் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்வதற்காக RCB அணி வீரர்கள் எடுக்கும் முயற்சிகள் ரசிகர்களை வியக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக கடந்த சில சீசன்களில் RCB அணி விளையாடியதை பார்க்கையில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இப்போது வரவிருக்கும் சீசனில், RCB அணியில் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் இல்லை என்பது கவனத்திற்குரியது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – விநியோகம் தொடக்கம்!

ஆனால் அவர்களுக்கு ஏற்ற திறமை வாய்ந்த ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற வீரர்களை RCB பெற்றுள்ளது. இப்போது RCB அணியின் ஒட்டுமொத்த பலத்தை பார்க்கையில் அவர்களுக்கான வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பது போல தெரிகிறது. ஆனால் அவர்கள் களத்தில் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்போது ஐபிஎல் 2022 சீசனில் ஆரஞ்சு தொப்பியை வெல்லக்கூடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் மூன்று வீரர்களை பற்றி இப்போது பார்ப்போம்.

விராட் கோலி:

இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. இவர் கடந்த சில ஆண்டுகளாக, ஒரு சில ஆட்டங்களை தவிர மற்ற நேரங்களில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். விராட் கோலி கடைசியாக சர்வதேச போட்டியில் சதம் அடித்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. கடந்த இரண்டு ஐபிஎல் போட்டிகளிலும் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இது போன்ற பல பிரச்சனைகளை சமாளிப்பதற்காக விராட் கோலி தனது கேப்டன் பதவியை துறந்து, இந்த முறை RCB அணியில் ஒரு வீரராக மட்டுமே இடம்பிடிக்க இருக்கிறார்.

அதனால் இந்தியன் பிரீமியர் லீக்கில் அவர் தனது ஃபார்மை மீண்டும் கொண்டு வருவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அந்த வகையில் முன்னாள் RCB கேப்டன் விராட் கோலியின் பங்களிப்பு நிச்சயமாக அணியின் அதிர்ஷ்டத்திற்கு முக்கியமானதாக இருக்கும். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள விராட் கோலி இதுவரை 6000 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார். மேலும் அவர் வரவிருக்கும் சீசனில் நேர்மறையான தொடக்கத்தை பெற முடிந்தால், அவர் உண்மையில் பேட்டிங் மூலம் மற்ற அணி வீரர்களுக்கு ஒரு மிரட்டலை விடுவார் என்பதில் சந்தேகமில்லை.

கிளென் மேக்ஸ்வெல்:

ஏபி டி வில்லியர்ஸ் அணியில் இல்லாததால் RCB அணியின் கிளென் மேக்ஸ்வெல்லின் தோள்களில் நிறைய பொறுப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கிளென் மேக்ஸ்வெல், பேட்டிங்கில் பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணிக்காக அதிக ரன் எடுத்தவராக அந்த சீசனையும் முடித்திருந்தார். குறிப்பாக மேக்ஸ்வெல் 15 போட்டிகளில் 42.75 மற்றும் 144.10 என்ற சிறந்த சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டில் 513 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டும் அவர் இதேபோன்ற பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாஃப் டு பிளெசிஸ்:

தென்னாப்பிரிக்க அணிக்காக ஃபாஃப் டு பிளெசிஸ் விளையாட மாட்டார் என்றாலும் அவரால் இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் முழு கவனம் செலுத்த முடியும். தற்போது RCB அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டு பிளெசிஸ் அணியை முன்னோக்கி வழிநடத்தும் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வேண்டும். கடந்த ஆண்டு CSK அணிக்காக பேட் மூலம் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்த டு பிளெசிஸ் அந்த சீசனில் இரண்டாவது அதிக ரன் எடுத்தவராக இருந்தார். அதே போல இந்த ஆண்டும் டு பிளெசிஸ் இதேபோன்ற ஆட்டத்தை பிரதிபலிக்கும் பட்சத்தில் RCB பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!