Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் ரூ.500க்கு கீழ் உள்ள திட்டங்கள்!

0
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் ரூ.500க்கு கீழ் உள்ள திட்டங்கள்!
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் ரூ.500க்கு கீழ் உள்ள திட்டங்கள்!
Airtel vs Jio vs Vi நிறுவனங்களின் ரூ.500க்கு கீழ் உள்ள திட்டங்கள்!

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீப காலமாக அழைப்புகள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை தவிர வேறு பல கூடுதல் சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் ரூ.500 க்கும் குறைவான ப்ரீபெய்டு திட்டங்களின் சலுகைகளை பற்றி கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ப்ரீபெய்டு திட்டம்:

தற்போது கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் இணையத்தில் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். தொற்று காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் திரைப்படங்கள் அனைத்தும் OTT தளத்தில் மட்டுமே வெளியிடப்படுகிறது. இதனால் OTT தளங்களின் சந்தாக்களும் மக்களுக்கு ரீசார்ஜ் திட்டத்துடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் அமேசானுடன் கூட்டு சேர்ந்து ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு பிரைம் வீடியோ மொபைல் செயலியை வழங்கி வருகிறது. Airtel vs Jio vs Vi நிறுவனங்கள் ரூ.500 க்கு கீழ் வழங்கும் திட்டங்களின் பலன்களை குறித்து கீழே காணலாம்.

ஏர்டெல் ரூ.289 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும், அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றையும் வழங்குகிறது. இந்த திட்டம் ஜீ 5 பிரீமியத்திற்கு 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இலவச சந்தாவுடன் வருகிறது. மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியத்திற்கான சந்தா, விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமியின் சந்தாக்களும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ.150 கேஷ்பேக் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றையும் வழங்குகிறது. இந்த திட்டம் அமேசான் பிரைமுக்கு இலவச சந்தா மற்றும், ரூ.289 திட்டத்தின் கூடுதல் நன்மைகளுடன் கிடைக்கிறது.

TN Job “FB  Group” Join Now

ஏர்டெல் ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு கிடைக்கிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றையும் வழங்குகிறது. மேலும், டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கு இலவச ஓராண்டு விஐபி சந்தா மற்றும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான அணுகலும் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.401 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டம் 90 ஜிபி டேட்டா அதாவது, ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 6 ஜிபி. டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும், டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கு ஒரு ஆண்டு சந்தாவுடன் கிடைக்கிறது.

ஜியோ ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டம் டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கு ஒரு வருட விஐபி சந்தாவுடன் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா உடன் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. மேலும், கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கிடையாது. மேலும், ஜியோ பயன்பாடுகளுக்கு ஒரு சந்தாவையும் வழங்குகிறது.

Vi ரூ.355 திட்டம்:

இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு 50 ஜிபி டேட்டாவை மட்டும் வழங்குகிறது. மேலும், ஒரு வருடத்திற்கு ஜீ பிரீமியத்திற்கான அணுகலையும் வழங்குகிறது.

Vi ரூ.405 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் 90 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்கள், மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் களையும் வழங்குகிறது. ஜீ 5 பிரீமியம் மற்றும் வி திரைப்படங்கள் மற்றும் டிவிக்கு ஒரு வருட சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!