தமிழகத்தில் B.Pharm படித்தவர்களுக்கு மருந்தாளுநர் பணி – அரசுக்கு கோரிக்கை!

1
தமிழகத்தில் B.Pharm படித்தவர்களுக்கு மருந்தாளுநர் பணி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் B.Pharm படித்தவர்களுக்கு மருந்தாளுநர் பணி - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் B.Pharm படித்தவர்களுக்கு மருந்தாளுநர் பணி – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் மருந்தாளுநர் பணி நியமனத்தின் போது B.Pharm மற்றும் D.Pharm பட்டதாரிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பினர்களுக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

மருந்தாளுனர் பணி:

தமிழக அரசு மருந்தாளர் பணி நியமனத்தின் போது B.Pharm பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து மருத்துவமனைகளிலும், 5,000 க்கும் பெறப்பட்ட மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதாவது 1,235 மருந்தாளுநர்கள், 4,624 துணை மருத்துவப் பணியாளர்கள் பணியிடம் காலியாக இருக்கிறது.

CBSE இறுதி தேர்வுகள் 2022 புதிய வழிமுறை – கல்வி வாரியம் வெளியீடு!

இதற்கு தகுதியுடையவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து ஆள்தேர்வு அறிவிக்கை தற்போது அறிவிக்கப்பட இருப்பதால், இம்முறையாவது பி.பார்ம் பட்டதாரிகளுக்கு மருந்தாளுநர் பணி அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. பொதுவாக மருந்தாளர் பணிக்கு டி.பார்ம் பட்டதாரிகளை விட, பி.பார்ம் படித்தவர்கள் கூடுதல் தகுதியுடையவர்கள் ஆவர். ஆனால் தமிழகத்தை பொருத்தளவு பி.பார்ம் படித்தவர்களுக்கு மருந்தாளர் பணி மறுக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதாவது டி.பார்ம் படித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் போதிய அளவு வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால், அரசுப் பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும் தமிழக அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் பொறியியல் உட்பட பல்வேறு துறைகளில் படித்தவர்கள், 10 ஆம் வகுப்பு படித்துள்ளவர்களுடன் போட்டியிடுகின்றனர். அந்த அடிப்படையில் கவனிக்கையில், மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இது தவிர தமிழக அரசு வேலைவாய்ப்பில் பி.பார்ம் படித்தவர்கள் மருந்து ஆய்வாளர் பணிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் அரசு பணிகளில் மொத்தமாக 140 இடம் மட்டுமே உள்ளது. இதற்கிடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில், மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு மருந்தாளுநர் பணி நியமனத்தின் போது டி.பார்ம் மற்றும் பி.பார்ம் பட்டதாரிகளுக்கும் சம அளவு வேலைவாய்ப்புகளை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசு புதிய திட்டம் வகுத்து அவற்றை செயல்படுத்த வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!