PG TRB 2207 காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு – வயது வரம்பு நீட்டித்தும் புதிய சிக்கல்!

0
PG TRB 2207 காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு - வயது வரம்பு நீட்டித்தும் புதிய சிக்கல்!
PG TRB 2207 காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு - வயது வரம்பு நீட்டித்தும் புதிய சிக்கல்!
PG TRB 2207 காலிப்பணியிடங்கள் விண்ணப்ப பதிவு – வயது வரம்பு நீட்டித்தும் புதிய சிக்கல்!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் TRB தேர்வுகளை எழுதுவதற்கான வயது வரம்பு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பதிவுகளை செலுத்த முடியாமல் தேர்வர்கள் தவித்து வருவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவில் சிக்கல்

தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் சுமார் 2,207 பணியிடங்களுக்காக ஆட்சேர்ப்புகளை நடத்த தேர்வுகளை நடத்துவதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அந்த வகையில் TRB தேர்வுகளை எழுதுவதற்கு 40 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

BECIL நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ரூ.20.202/- ஊதியம்!!

இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த விண்ணப்பதாரர்கள் TRB தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பில் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கைகளை ஏற்று முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களது வயது வரம்பு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 45 முதல் 50 ஆகவும், OC பிரிவினருக்கு 40 லிருந்து 45 ஆகவும் தளர்த்தப்பட்டது. இதே போல இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த முல்லை இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இதை தொடர்ந்து வயது வரம்புகளில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் கீழ் தகுதியுடைய பலரும் ஆன்லைன் விண்ணப்பங்களை செலுத்த முற்பட்டனர். ஆனால் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் வயது வரம்பு உயர்த்தியது தொடர்பாக எவ்வித விவரங்களும் இணைக்கப்படவில்லை. அந்த வகையில் அக்.23ம் தேதி வரையும் இந்த விவரங்கள் இணையத்தில் இணைக்கப்படாததால் மையங்களுக்கு சென்ற விண்ணப்பதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.20,000/-

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகையில், ‘முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் வயது தளர்வு அறிவித்தும் இது தொடர்பான விவரங்கள் விண்ணப்பதிவில் இணைக்கப்படவில்லை. இது குறித்து TRBயிடம் கேட்டபோது அந்த விவரங்கள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்தனர்’ என குறிப்பிட்டுள்ளனர். அதனால் வயது வரம்பில் தளர்வுகள் அறிவித்தும் விண்ணப்பங்களை செலுத்த முடியாமல் ஏமாற்றத்தில் இருப்பதாக விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!