விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த முல்லை இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் அடுத்த முல்லை இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலின் அடுத்த முல்லை இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்த முல்லை இவர் தானா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா அந்த சீரியலில் இருந்து விலகுவதாக சொல்லப்பட்டு வரும் சமயத்தில் அந்த கதாப்பாத்திரத்தில் நடிகை ரம்யா அல்லது தர்ஷா குப்தா நடிக்கலாம் என தெரிகிறது.

நடிகை காவ்யா

பல்வேறு குறும்படங்கள் மற்றும் டிக்டாக் வீடியோக்கள் மூலம் தமிழ் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் நடிகை காவ்யா. அந்த வகையில் நடிகை காவ்யா, பிரபல விஜய் டிவி சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவுமணி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியலில் குறிப்பிட்ட அளவு ரசிகர்களை சம்பாதித்திருந்த இவர், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சித்ராவின் மறைவுக்கு பிறகு அந்த சீரியலின் புதிய முல்லையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன அபிஷேக் – ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்திற்கு இருந்த வரவேற்பை தக்கவைத்து கொள்ள முயற்சி செய்து வந்த காவ்யாவுக்கு தற்போது தான் மக்கள் அங்கீகாரம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை காவ்யாவுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது நடிகர் கவின் மற்றும் நடிகை வாணிபோஜன் இணைந்து நடிக்கும் ‘ஊர்க்குருவி’ திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் காவ்யா.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

அதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு இவர் விலக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது நடிகை காவ்யா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக குக் வித் கோமாளி புகழ் நடிகை தர்ஷா குப்தா அந்த ரோலில் நடிப்பார் என வலைதளங்களில் சில தகவல்கள் வெளியானது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகும் பரினா – புதிய வெண்பா இவங்க தான்! ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆனால் தர்ஷா குப்தா தற்போது பாலிவுட் நடிகை சன்னிலியோன் உடன் ஒரு முக்கிய திரைப்படத்தில் நடித்து வருவதால் அவர் சீரியலுக்கு வர மாட்டார் என தெரிகிறது. இவரை தொடர்ந்து தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லை கதாப்பாத்திரத்தில் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதிசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here