புத்தாண்டையொட்டி பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம்? – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!!

0
புத்தாண்டையொட்டி பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம்? – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!!

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் டீசல் விலை:

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் திடீரென பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் பின்னர், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கலால் வரி அடிப்படையில் குறைக்கப்பட்டது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலும் பெட்ரோல், டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2024 ஜனவரி மாதம் வேலைவாய்ப்பு கண்காட்சி – அரசின் ஏற்பாடுகள்!

அதைப்போல, இன்றும் சென்னையில் 589 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நிச்சயமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல், டீசலின் விலையை ரூ. 4 முதல் ரூ.6 வரையிலும் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!