தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்திரம் – முக்கிய கோரிக்கை!

0
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்திரம் - முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்திரம் - முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்திரம் – முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 16,543 ஆசிரியர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும் என முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பணி நிரந்திரம்:

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்க இயக்கத்தின் கீழ் கிட்டத்தட்ட 16, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் ரூ. 5000 மாத சம்பளத்தில் நியமிக்கப்பட்ட இந்த பகுதி நேர ஆசிரியர்கள் தற்போது ரூ.10 ஆயிரம் மாத சம்பளமாக பெற்று வருகின்றனர். மேலும், மற்ற தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எந்தவித சலுகைகளும் இந்தப் பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஆதாரை அப்டேட் செய்ய போறீங்களா? இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க.. ரீ செக் பண்ணுங்க!

இதன் பின்னர் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 127 வது அரசாணை படி பகுதி நேர ஆசிரியர்கள் வாரத்தில் 3 நாட்கள் வீதம் மாதத்தில் 12 நாட்கள் மட்டும் பணி செய்தால் போதும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர், 186 ஆவது அரசாணைப்படி ஒரு பள்ளி ஆசிரியர் இரண்டு பள்ளிகளில் அதிகப்பட்சமாக பணியாற்றலாம் என விதிகள் திருத்தப்பட்ட நிலையிலும் அந்த அறிவிப்பு தற்போது வரைக்கும் நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கிறது. அதாவது, வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் பணியாற்றலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு அந்தப் பள்ளியில் ஏதேனும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் அந்த வகுப்பினையும் பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு கவனித்துக் கொள்ள கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால், வாரம் முழுவதுமே பகுதிநேர ஆசிரியர்கள் பள்ளிகளில் வேலை செய்வதாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளமும் கொடுக்கப்படுவதில்லை. இவ்வாறு அல்லல்பட்டு கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு உடனடியாக பணம் நிரந்தரம் வழங்கப்பட வேண்டும் என நாம் தமிழர் சீமான் அறிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!