தமிழகத்தில் முதியோர் பென்சன் திட்டங்களுக்கு இனி “இது” கட்டாயம் – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் முதியோர் பென்சன் திட்டங்களுக்கு இனி
தமிழகத்தில் முதியோர் பென்சன் திட்டங்களுக்கு இனி "இது" கட்டாயம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் முதியோர் பென்சன் திட்டங்களுக்கு இனி “இது” கட்டாயம் – அரசாணை வெளியீடு!

முதியோர் பென்சன் திட்டம் மற்றும் ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 8 வகையான திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆதார் கார்டு கட்டாயம்

தமிழகத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்ற / கைவிடப்பட்ட விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பென்சன் திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. இதில் முதியோர் மற்றும் விதவைகள் மிகுந்த அளவு பயன்பெறுகின்றனர். தற்போது இந்த திட்டங்களை பெறுபவர்கள் கட்டாயமான முறையில் ஆதார் கார்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த பென்சன் திட்டங்களில் 8 வகையான திட்டங்கள் உள்ளன.

டிசம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Old Age Pension Scheme), இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Disability Pension Scheme), இந்திரா காந்தி தேசிய விதவை பென்சன் திட்டம் (Indira Gandhi National Widow Pension Scheme), மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் (Differently Abled Pension Scheme), ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம் (Destitute Widow Pension Scheme), ஆதரவற்ற/கைவிடப்பட்ட மனைவிகள் ஓய்வூதியத் திட்டம் (Destitute/Deserted Wives Pension Scheme), முதல்வர் உழவுப் பாதுகாப்புத் திட்டம் (Chief Minister’s Uzhavar Pathukappu Thittam), 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம் போன்ற திட்டங்கள் ஆகும்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பெயர் பட்டியல் வெளியிட கோரிக்கை!

இந்த 8 திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 பென்சன் தொகையாக வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டங்கள் மூலம் பயன்பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் ஆதார் கார்டு பெறும் வரை பென்சன் தொகை பெறுவதற்கு ஆதார் கார்டு விண்ணப்பித்ததற்கான கோரிக்கை ஆவணம் காட்ட வேண்டும். அத்துடன் இதோடு வங்கி பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காட்ட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!