
கண்ணனை திட்டியதை நினைத்து வருத்தப்படும் மூர்த்தி, லாபத்துடன் இருக்கும் கடை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ப்ரோமோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் கடையை திறக்க விஷயத்தை தெரிந்த மூர்த்தி கோவத்தில் பயங்கரமாக திட்டுகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நெகட்டிவ் ரோல் இல்லாத ஒரே சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் தற்போது மூர்த்தி குடும்பத்தினர் சென்னையை சுற்றிப்பார்க்க சென்றுவிட கடை மூடி இருப்பதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைகிறது. அதனால் கண்ணன் மூர்த்தி வீட்டில் சுவர் ஏறி குதித்து கடை சாவியை எடுத்து கடையை திறக்கிறார். மேலும் வாடிக்கையாளர்களை மீண்டும் வர வைக்க, கண்ணன் இலவசமாக மொபைல் போன் கொடுப்பதாக சொல்கிறார்.
பழைய ஐஸ்வர்யாவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
வீட்டிற்கு வந்த மூர்த்திக்கு கண்ணன் கடையை திறந்தது தெரிய வருகிறது. அதனால் கோவப்பட்ட மூர்த்தி ரோட்டில் நின்று கண்ணனை கூப்பிடுகிறார். உடனே தனம் உள்ளே அழைத்து பேசலாம் என சொல்ல, கண்ணன் உள்ளே வருகிறார். மூர்த்தி கடையை திறந்தாயா என கேட்க ஆமாம் என கண்ணன் சொல்கிறார். அவரை காரணம் செல்லவிடாமல் மூர்த்தி பயங்கரமாக திட்ட தனம் கண்ணனிற்கு ஆதரவாக பேசுகிறார். உடனே மூர்த்தி தனத்தை திட்ட, கண்ணன் வருத்தப்பட்டு வெளியே செல்கிறார்.
‘ஷ்ரேயாவை எனது மனைவியாக நினைக்கவில்லை’ – மனம் திறந்த ‘ராஜா ராணி’ சீரியல் சித்து!
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கடையில் ஜீவா கதிர் இருக்க மூர்த்தி வருகிறார். அப்போது ஜீவா கண்ணன் இப்படி செய்வான் என எதிர்பார்க்கவில்லை என சொல்ல, கணக்கு பார்த்த மூர்த்தி எதிர்பார்த்த அளவிற்கு நஷ்டம் எதுவும் இல்லை, கடை நல்ல லாபத்தில் தான் இருக்கிறது. அவரசப்பட்டு கண்ணனை திட்டிவிட்டேன் என ஜீவா கதிரிடம் சொல்லி வருத்தப்படுகிறார். இந்த ப்ரோமோ பார்த்ததும் கண்ணனை விரைவில் மூர்த்தி ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்துள்ளது.