தனத்திற்கு குழந்தையாக பிறக்கும் லட்சுமி அம்மா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த கதைக்களம்!

0
தனத்திற்கு குழந்தையாக பிறக்கும் லட்சுமி அம்மா? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த கதைக்களம்!
தனத்திற்கு குழந்தையாக பிறக்கும் லட்சுமி அம்மா? 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த கதைக்களம்!
தனத்திற்கு குழந்தையாக பிறக்கும் லட்சுமி அம்மா? ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த கதைக்களம்!

விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் தற்போது லட்சுமி அம்மாவின் இறப்பு தொடர்பான கதைக்களம் முடிந்ததும், தனத்துக்கு பெண் குழந்தை பிறக்கும் அது லட்சுமி அம்மா என குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதாக அடுத்த கட்ட காட்சிகள் ஒளிபரப்பாகலாம் என கூறப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மக்களின் பேராதரவுடன் சுமார் 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் சில விரிசல் விழுந்துள்ளது. அந்த வகையில் கண்ணன் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ள நிலையில், மூர்த்தி குடும்பம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது.

மனம் திருந்தி கண்ணம்மாவுடன் சேர விரும்பும் பாரதி – வெண்பா ஷாக்! வெளியான ப்ரோமோ!

அதிலும் லட்சுமி அம்மாவின் மரணம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வெகுவாக பாதித்துள்ளது. இதில் கண்ணன் வருவதற்கு முன்னாகவே லட்சுமி அம்மாவை தகனம் செய்து விடுகின்றனர். அதனால் கண்டிப்பாக குடும்பத்தில் இன்னுமொரு பிளவு உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை கண்ணனை வேண்டாம் என உதறி தள்ளிய குடும்பத்தினரை, இனி வரும் எபிசோடுகளில் கண்ணன் வெறுப்பது போல புதிய கதைக்களம் உருவாகலாம்.

பிரபல தமிழ் நடிகையின் தந்தை திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!

அதே நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் தனத்துக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் பெண் குழந்தை பிறந்து, அது தான் இறந்து போன லட்சுமி அம்மாவாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அடுத்த கதைக்களம், தனத்துக்கு பெண் குழந்தை பிறக்கும். அது லட்சுமி அம்மா தான் என்று மூர்த்தி குடும்பத்தினர் அனைவரும் கொண்டாடலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!