பிரபல தமிழ் நடிகையின் தந்தை திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!

0
பிரபல தமிழ் நடிகையின் தந்தை திடீர் மரணம் - திரையுலகினர் இரங்கல்!
பிரபல தமிழ் நடிகையின் தந்தை திடீர் மரணம் - திரையுலகினர் இரங்கல்!
பிரபல தமிழ் நடிகையின் தந்தை திடீர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை நந்திதா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், இன்று காலை அவரது தந்தை காலமானார் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் திரையுலகினர் அவரது தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை நந்திதா:

தமிழ் சினிமாவில் நல்ல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவருக்கு முதல் படமே அமோக வெற்றியை கொடுத்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது. எதிர் நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, புலி போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார். குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்ற டயலாக் இவர் மூலமாக பிரபலமானார்.

மீண்டும் சின்னத்திரைக்குள் நுழைந்த VJ அர்ச்சனா – தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில், தொடர்ந்து விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி, அந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டரில் நேற்று கருத்து பதிவிட்ட அவர், எனது அப்பா சிவசாமி 54 இன்று காலமானார் என்பதை எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

சன் டிவி “கண்ணான கண்ணே” சீரியலில் இருந்து நடிகை திடீர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த பதிவில் நந்திதாவின் நெருங்கிய தோழியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சாரி நந்திதா. அவரின் ஆசிர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும் என இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நந்திதாவிற்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அவர் முதன் முதலில் நடித்த கன்னட படத்தில் நந்திதா என்ற கேரக்டரில் நடித்தார். அதனால் அவரது ஸ்வேதா என்ற பெயருக்கு முன்னால் நந்திதா என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!