கதிரை அசிங்கப்படுத்திய மல்லி, சண்டைக்கு வந்த முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
கதிரை அசிங்கப்படுத்திய மல்லி, சண்டைக்கு வந்த முல்லை - இன்றைய
கதிரை அசிங்கப்படுத்திய மல்லி, சண்டைக்கு வந்த முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
கதிரை அசிங்கப்படுத்திய மல்லி, சண்டைக்கு வந்த முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையின் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வருகிறார். உடனே மல்லி என் அம்மாவை அழைத்து செல்ல நீங்க யாரு நானே கூட்டிக் கொண்டு செல்கிறேன் என அசிங்கப்படுத்தி அனுப்புகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லையின் அம்மா பார்வதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வருகிறார். அங்கே மல்லியும் கஸ்தூரியும் இருக்கிறார். அப்போது கதிர் நீங்களும் நீங்க தான் இருக்கீங்களா என கதிர் கேட்க, இது என் வீடு நான் இங்க இருக்காமல் எங்கே இருப்பேன் என மல்லி கேட்கிறார். உடனே கதிர் முல்லை அம்மாவிடம் அம்மா இறந்ததால் உங்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியவில்லை, மாத்திரை எல்லாம் முடிந்திருக்குமே என கேட்கிறார்.

உடனே பார்வதி ஆமாம் மாத்திரை முடிந்துவிட்டது என சொல்கிறார். சரி நாம் கிளம்புவோம் என சொல்ல, உடனே மல்லி அம்மாவிற்கு என்ன ஆச்சு என கேட்கிறார். அம்மாவிற்கு உடம்பு சரி இல்லாமல் போனது அதில் இருந்து மாப்பிள்ளை தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார் என முருகன் சொல்கிறார். அம்மா இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை, என்னிடம் சொல்லிருந்தால் நான் அழைத்துக் கொண்டு செல்வேன் நீங்க ஏன் கண்டவன் கூட போக வேண்டும் என சொல்லி கதிரை ஆசைப்படுத்துகிறார்.

கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முடிவு செய்யும் பாரதி, அம்மாவை நினைத்து கவலைப்படும் லட்சுமி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

பின் முருகன் அவர் தான் இத்தனை நாள் அழைத்து கொண்டு சென்றார் என சொல்ல, இவ்வளவு நாள் எங்கிருந்தேன் என தெரியாமல் இருந்தது அதான் கண்டவன் எல்லாம் உங்களுக்கு உதவி செய்திருக்கார்கள். இப்படி என் அம்மாவிற்கு உதவி செய்து ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஓட்டுவது எல்லாம் தேவை இல்லை என மல்லி அவமானப்படுத்துகிறார். பின் கதிர் அங்கிருந்து செல்ல, அவர் முல்லையின் கணவர் இப்படி எல்லாம் பேசலாமா என பார்வதி சொல்கிறார்.

கதிர் மல்லி பேசியதை நினைத்து கவலைப்பட்டு கொண்டிருக்க, ஜீவா கடையை பற்றி பேசியதை காதில் வாங்காமல் இருக்கிறார். அந்த நேரம் பார்த்து முல்லை அங்கே வருகிறார். அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக சொன்னீங்க என்ன சொன்னாங்க என கேட்கிறார். கதிர் கூட்டிக் கொண்டு போனேன் எல்லாம் சரியாகிவிடும் என பொய் சொல்கிறார். அப்போது முல்லையின் அப்பா வருகிறார்.என்ன அப்பா மருத்துவமனையில் என்ன சொன்னார்கள் என கேட்கிறார். அப்போது மல்லி பேசியதை பற்றி முல்லையிடம் சொல்லி கதிரிடம் மன்னிப்பு கேட்கிறார்.

மீனாவின் செயலால் அதிர்ச்சி அடையும் குடும்பத்தினர்; வருத்தத்தில் முல்லை – இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ்!

உடனே முல்லை இதனை நாள் அவள் எங்கிருந்தால் இப்போது வந்து என் அம்மா என்று உரிமை கொண்டாடுகிறார் என கேட்கிறார். பின் முல்லையை தடுக்க கதிர் மற்றும் முருகன் வருகிறார். இவ பெரிய ஆளா என சண்டைக்கு வருகிறார். உடனே மல்லி என்ன அப்பா முல்லையை சொல்லி கூட்டிக் கொண்டு வந்துருக்கீங்களா என கேட்கிறார். என் புருஷனை பேசினால் நான் கேட்பேன் நான் கேட்காமல் வேறு யாரு கேட்பார் என சொல்கிறார். அம்மாவிற்கு நான் மருத்துவமனை கூட்டிக் கொண்டு செல்ல கூடாத என கேட்கிறார்.

உடனே முல்லை இவரை மரியாதை இல்லாமல் பேச நீ யாரு என முல்லை கேட்க, முருகன் மனது சரி இல்லாமல் தான் மன்னிப்பு கேட்க வந்தேன் என சொல்கிறார். போட்டுக் கொடுத்து விட்டு இப்போது அப்பாவி மாதிரி நடிக்கிறீங்களா என மல்லி கேட்க, அப்பா ஏன் போட்டுக் கொடுக்கணும் அவர் என்ன உன்ன மாதிரி பைத்தியமா கேட்கிறார். நான் அப்படி தான் பேசுவேன் என மல்லி சொல்ல, உன் திமிரை எல்லாம் மதுரையில் வைத்துக் கொள் என சொல்லி, அவர் மருத்துவமனைக்கு கூட்டிட்டு செல்வதை வீட்டில் யாரிடமும் சொல்லமாட்டார் என சொல்கிறார்.

என் வாழ்க்கையை கெடுக்க தான் உன் குடும்பம் திட்டமிடுகிறது என சொல்ல, அந்த குடும்பத்தில் வாழ உனக்கு கொடுத்துவைக்கவில்லை. அவங்க அப்படி தான் வருவாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்கள் உனக்கு இஷ்டம் இருந்தால் இங்கே இரு, இல்லையென்றால் மதுரைக்கு கிளம்பி செல்லு, நீ இத்தனை வருடம் கழித்து எதற்கு வந்தாய் வராமலே இருக்கலாம் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். பின் கதிர் எதற்கு இவ்வளவு கோவம் என சொல்லி முல்லையை சமாதானம் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!