கண்ணனை வேலை சொல்லும் தனம், கோவப்பட்ட ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கண்ணனை வேலை சொல்லும் தனம், கோவப்பட்ட ஐஸ்வர்யா - இன்றைய
கண்ணனை வேலை சொல்லும் தனம், கோவப்பட்ட ஐஸ்வர்யா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கண்ணனை வேலை சொல்லும் தனம், கோவப்பட்ட ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கடை திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்கின்றனர். பின் கண்ணனை பற்றி ஐஸ்வர்யா பேச அதை நினைத்து முல்லை வருத்தப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா கண்ணனிடம் நாம வேலைக்கு போக வேண்டும் என சொல்கிறார். மீனா அக்கா இப்பவே பேச தொடங்கிவிட்டார் அதனால் நாம இப்படியே காசு வாங்க முடியாது அல்லவா என கேட்கிறார். தனம் கடைக்கு சென்றவர்கள் இன்னும் வராமல் இருக்கிறார்கள். இனிமேல் அவர்கள் வந்து சாப்பிட்டு அப்பறம் எப்படி எல்லாம் செய்ய முடியும் என கேட்கிறார். பொங்கல் நேரமாக இருப்பதால் கூட்டமாக இருக்கும் என முல்லை சொல்கிறார். அவர்களுக்கு நான் போன் செய்தேன் ஆனால் எடுக்கவில்லை என சொல்ல, ஜீவாவிடம் கேட்டோன் பக்கத்தில் வந்துவிட்டாராம் என சொல்கிறார்.

அப்போது அனைவரும் வர, கடையில் அதிகம் கூட்டம் என சொல்கிறார். இத்தனை நாள் குடவுன் இல்லாமல் கஷ்டமாக இருந்தது.கடை வேலைகள் எப்போது செய்வார்களாம் என கேட்கிறார். கடை வேலைகள் சீக்கரம் முடிந்துவிடம் என கதிர் சொல்ல, அப்போது கடை திறக்க நாள் பார்த்துவிடலாம் என சொல்ல ஐஸ்வர்யா வந்து இப்போது கடை திறக்க போறீங்க அதனால் எனக்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாக சொல்கிறார். பின் கடை திறக்க நாள் பார்க்க, கடைக்கு புதிய பெயர் வைக்கலாம் எனஜீவா சொல்கிறார். அப்போது ஜீவா பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் என வைக்கலாம் என்று சொல்கிறார்,

பாரதி உடன் வாழ்ந்த பழைய வாழ்க்கையை சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா, வித்தியாசமாக நடந்து கொள்ளும் வெண்பா – இன்றைய எபிசோட்!

எல்லாரும் சரி என சொல்ல, முல்லை அவரது அம்மாவிடம் போன் செய்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர் வர, முல்லையிடம் நான் வந்ததும் ஏன் போனை வைத்துவிட்டாய் என கேட்கிறார். என் அக்கா மல்லி போன் செய்தாள், இங்கே பொங்கல் இல்லாததால் அவள் பொங்கலுக்கு வர சொல்லுகிறார் என சொல்ல சரி போய்ட்டு வா என கதிர் சொல்கிறார். அக்காவிடம் மரியாதையாக பேசு நான் என் அண்ணனிடம் எப்படி பேசுவேன் தெரியுமா என கேட்கிறார். அதற்கு அவள் அப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லவா என கேட்க, கதிர் கிண்டல் செய்கிறார்.

தனம் மேலே இருக்கும் பொங்கல் பானையை எடுத்து துடைத்து வைக்கலாம் என சொல்கிறார். தனம் என் அம்மா கொடுத்த சீர், முல்லை கொண்டு வந்த சீர், மீனா கொண்டு வந்த சீர் என எல்லாம் இருக்கிறது. அதை எல்லாம் வழக்கமாக எடுத்து துடைத்து வைப்போம் என சொல்கிறார். தனம் இந்த வருசமும் வீட்டிற்கு வெள்ளை அடிப்போம் என கேட்க, இப்போது தான எடுப்போம் என சொல்கிறார். பின் லட்சுமி அம்மாவின் நினைவுகளை பார்க்க சொல்கிறார். ஐஸ்வர்யா நானும் பார்க்க வேண்டும் என சொல்ல, முல்லை பழைய போட்டோக்களை எடுக்க போகிறார்.

முழு ஊரடங்கு இல்லை, முதல்வர் எடுத்த புதிய முடிவு – பொதுமக்கள் நிம்மதி!

அனைவரும் உட்கார்ந்து போட்டோ பார்த்து கொண்டிருக்க, கண்ணன் சிறு வயது போட்டோவை பார்த்து கண்ணன் ட்ரெஸ் போடாமல் இருப்பதை பார்த்து கிண்டல் செய்கிறார். கதிர் பாரேன் சின்ன வயதில் குண்டாக இருக்கிறார். இப்போது இளைத்துவிட்டார் என சொல்கிறார். உடனே மீனா கிண்டல் செய்ய, ஐஸ்வர்யா கண்ணன் சின்ன பையனாக இருக்கும் போதே இந்த வீட்டிற்கு வந்துவிட்டிங்களா என கேட்கிறார். எனக்கு சீக்கிரமாக கல்யாணம் முடிந்துவிட்டது என சொல்ல, கண்ணன் வந்ததும் பாத்திரங்களை எடுக்க சொல்ல வேண்டும் என சொல்கிறார்.

அப்போது ஐஸ்வர்யா ஏன் கண்ணன் தான் எடுக்க வேண்டும். கதிர் மாமாவை எடுக்க சொல்லுங்கள் என சொல்கிறார். கண்ணனை விட கதிர் மாமா ஸ்ட்ராங்காக இருக்காங்க என சொல்ல, கண்ணன் என்ன சின்ன புள்ளையா அவனை எடுக்க சொல்றீங்க என கேட்கிறார். அப்போது முல்லை விளக்கு எல்லாம் கழுவி கொண்டிருக்க, மீனாவிடம் ஐஸ்வர்யா பேசியதை பற்றி நினைத்து வருத்தப்படுகிறார். அவள் இப்படி பேசியதற்கு நீங்க அவளிடம் பேசியிருக்க வேண்டும் என சொல்கிறார். கண்ணன் சின்ன பையன் தான அவனை சொன்னால் என்ன என கேட்கிறார். அப்படியே கஸ்தூரி அத்தாச்சி புத்தி அவருக்கு என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!