பாரதி உடன் வாழ்ந்த பழைய வாழ்க்கையை சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா, வித்தியாசமாக நடந்து கொள்ளும் வெண்பா – இன்றைய எபிசோட்!

0
பாரதி உடன் வாழ்ந்த பழைய வாழ்க்கையை சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா, வித்தியாசமாக நடந்து கொள்ளும் வெண்பா - இன்றைய எபிசோட்!
பாரதி உடன் வாழ்ந்த பழைய வாழ்க்கையை சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா, வித்தியாசமாக நடந்து கொள்ளும் வெண்பா - இன்றைய எபிசோட்!
பாரதி உடன் வாழ்ந்த பழைய வாழ்க்கையை சொல்லி வருத்தப்படும் கண்ணம்மா, வித்தியாசமாக நடந்து கொள்ளும் வெண்பா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வடிவுக்கரசியிடம் பாரதி உடன் கல்யாண வாழ்க்கையில் நடந்த சந்தோசமான நிகழ்வுகளை சொல்லி எமோஷனல் ஆகிறார், பின் வெண்பா வித்தியாசமாக நடந்து கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவிடம் வடிவு முதல் கல்யாண நாள் அன்று என்ன நடந்தது என மீதமுள்ள கதையை கேட்கிறார். அப்போது கண்ணம்மா நீங்க வேற அக்கா நானே எதோ கேட்டீங்க என சொன்னேன் என்று சொல்ல, நீ சொல்வது நல்ல விறுவிறுப்பாக இருந்தது இன்னும் எவ்வளவு நடந்திருக்கும் என கேட்கிறார்.அப்போது கண்ணம்மா மீதமுள்ள கதை சொல்ல தொடங்குகிறார். அப்போது பாரதி கண்ணம்மா சேர்ந்து வர சௌந்தர்யா அவர்கள் மிகவும்அழகாக இருக்காங்க என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா சௌந்தர்யா காலில் விழுந்து ஆசிர்வாதம் செய்ய சொல்ல, கண்ணம்மா மாசமாக இருக்கும் போது ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய் என கேட்கிறார். பின் பாரதியிடம் சௌந்தர்யா பரிசு கொடுக்கிறார். அதில் பாரதி கண்ணம்மா புகைப்படம் இருக்கிறது. உடனே கண்ணம்மா வீட்டில் குக்கர் விசில் அடிக்க, கண்ணம்மா இப்படி பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்தால் பழிக்கும் என சொல்வார்கள். ஆனால் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என சொல்கிறார்.

முழு ஊரடங்கு இல்லை, முதல்வர் எடுத்த புதிய முடிவு – பொதுமக்கள் நிம்மதி!

இவ்வளவு அழகான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறாய் கண்டிப்பாக மீண்டும் பழைய நிலைமைக்கு வருவாய் என வடிவு சொல்ல, கண்ணம்மா பழையதை நினைத்தால் அடுத்த வேலை சாப்பிட முடியுமா என கேட்கிறார். பின் வெண்பா சீல் வைத்ததை பற்றி சாந்தியிடம் சொல்கிறார். எல்லாம் அந்த கண்ணம்மாவால் வந்தது, நான் அவளை சும்மாவிடமாட்டேன் என சொல்ல, அப்போது மாயாண்டி வருகிறார். என்னாச்சு என வெண்பா கேட்க, அகில் அஞ்சலியை கடத்தியவனை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார் என சொல்கிறார்.

வெண்பா உன்னால் ஒரு வேலை கூட சரியாக செய்ய முடியாது என சொல்கிறார். வடிவு மீண்டும் கண்ணம்மாவிடம் பாரதி சிறப்பாக செய்தது பற்றி கேட்கிறார். கண்ணம்மா எனக்கு கல்யாணம் ஆன அப்போது தான் துப்பாக்கி படம் வந்தது. ஆனால் டிக்கெட் கிடைக்கவே இல்லை. ஆனால் அன்று அவர் படத்திற்கு முன்பாக போடும் இடத்திற்கு கூட்டிக் கொண்டு சென்றார் தியேட்டரில் நாங்க மட்டும் தான் இருந்தோம் என சொல்லி படம் பார்த்ததை பற்றி சொல்கிறார்.

திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானா தனியாக வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

அப்போது கண்ணம்மா சந்தோஷத்தில் பாரதியிடம் என்னை விட்டுவிட்டு போகமாடீங்க தான என கேட்கிறார். உன்னை விட்டு நான் எங்கே போவேன் என கேட்க, நீ இல்லை என்றால் நான் இல்லை கண்ணம்மா என சொல்லி சந்தோசமாக இருக்கிறார். பின் வடிவு இப்படி மனசு நிறைந்த காதல் காட்சிகளை வடிவு நினைத்து பார்க்கிறார்.இப்படி காதலித்துவிட்டு தான் அந்த டாக்டர் இப்படி இருக்கிறாரா என வடிவு சொல்ல கண்ணம்மா சிரிக்கிறார்.

சௌந்தர்யா அகில் அடிபட்டு வருவதை பார்த்து பதட்டம் அடைகிறார். அப்போது அகில் அஞ்சலியை கடத்தியவனை கண்டுபிடித்துவிட்டேன் என சொல்கிறார். அப்போது சௌந்தர்யா யாரு அவர்கள் என கேட்க, அவர்கள் காசுக்காக கடத்தியதாக சொல்கிறார்கள். ஆனால் நான் காரில் இருக்கும் போது அதில் வேற ஒருவன் இருந்தான் என சொல்கிறார். ஆனால் சௌந்தர்யா அகிலிடம் இனிமேல் எதுவும் செய்ய வேண்டாம் என சொல்கிறார். பின் வெண்பா டாக்டர் வேலை செய்வது போல தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து சாந்தி மாயாண்டி வருத்தப்படுகிறார்கள். பாரதி ஸ்கூலில் இருக்க டாக்டர் ஒருவர் லீவு கேட்டு வருகிறார்.

அப்போது அந்த டாக்டர் வந்து சொத்து பிரச்சனை இருக்கிறது என அம்மன் கோவில் சென்று பொங்கல் வைத்தால் சரியாகிவிடும் என சொல்ல, பாரதி அது என்ன கோவில் என கேட்கிறார். அங்கே இருவர் வந்து பொங்கல் வைக்க யாருடைய பானை சீக்கிரம் பொங்குகிறதோ அவர்கள் சொல்வது நியாயம் என சொல்கிறார். ஆனால் அங்கே பொங்கல் வைத்தது எல்லாம் நியாயமாக தான் இருக்கும் என சொல்கிறார். பாரதி நீதி காத்த அம்மன் பற்றி நினைத்து பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!