புது கடை சந்தோஷத்தில் பார்ட்டி கொடுத்த மூர்த்தி, புரோட்டா வாங்கி சாப்பிட நினைத்த பெண்கள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
புது கடை சந்தோஷத்தில் பார்ட்டி கொடுத்த மூர்த்தி, புரோட்டா வாங்கி சாப்பிட நினைத்த பெண்கள் - இன்றைய
புது கடை சந்தோஷத்தில் பார்ட்டி கொடுத்த மூர்த்தி, புரோட்டா வாங்கி சாப்பிட நினைத்த பெண்கள் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
புது கடை சந்தோஷத்தில் பார்ட்டி கொடுத்த மூர்த்தி, புரோட்டா வாங்கி சாப்பிட நினைத்த பெண்கள் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், புதுக்கடை திறந்த சந்தோசத்தை கொண்டாட மூர்த்தி ஜெகா தண்ணீ அடிக்க திட்டமிடுகின்றனர். பின் குடும்பத்துடன் புரோட்டா வாங்கி சாப்பிடுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி, ஜெகா, முல்லையின் அப்பா, கண்ணன். கதிர் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நினைத்தது போலவே கடையை திறந்து சாதித்துவிட்டீர்கள் என ஜெகா சொல்கிறார். இந்த சந்தோசத்தை கொண்டாட வேண்டும் என ஜெகா சொல்ல, சரக்கு வேண்டும் என கேட்கிறார். அம்மாடி உன் தங்கச்சிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என சொல்ல, அதெல்லாம் தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம் என ஜெகா சொல்கிறார். அது சமைத்துக் கொண்டிருக்கும் என ஜெகா சொல்ல, இதற்கு பார்ட்டி கொடுக்கவில்லை என்றால் எதற்கு பார்ட்டி கொடுக்க போகிறாய் என ஜெகா கேட்கிறார்.

பின் நீங்க எல்லாரும் ஒன்றும் வாங்கி கொடுக்கமாடீங்க நானே வாங்கிட்டு வரேன் என ஜெகா கிளம்புகிறார். பின் மீனா இன்று கடையில் புது புடவை கட்டிக் கொண்டு எல்லாரையும் வரவேற்றது எல்லாம் முடியாமல் வருகிறது. உடம்பெல்லாம் வலிக்கிறது என மீனா சொல்ல, அப்போது ஐஸ்வர்யா மோர் கொண்டு வருகிறார். மீனா வாங்கி குடித்துவிட்டு நன்றாக இருப்பதாக சொல்கிறார். அப்போது தனம் வந்து ரொம்ப குறுக்கு வலிப்பதாக சொல்ல எல்லாருக்கும் முடியாமல் தான் இருக்கிறது என முல்லை சொல்ல, தனம் பேசாமல் எல்லாருக்கும் இட்லி கொடுத்துவிடுவோம் என சொல்கிறார். ஆனால் இட்லி ஊற்றினால் நேரமாகும் என சொல்ல, அப்போ தோசை ஊற்றுவோம் என தனம் சொல்கிறார்.

ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்ல போகும் கண்ணம்மா, ஆசையாக காத்திருக்கும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

அதற்கு மாவு பத்தாது என ஐஸ்வர்யா சொல்ல, அப்போ சப்பாத்தி போடுவோம் என தனம் சொல்கிறார். ஆனால் அதெல்லாம் பெரிய வேலையாக இருக்கும் என முல்லை சொல்ல என்ன செய்வது என தெரியாமல் இருக்கின்றனர். பின் ஜெகா எல்லாருக்கும் சரக்கு ஊற்றி குடிக்க மூர்த்தி வேண்டாம் என சொல்கிறார், நீ தான வாங்கி கொண்டு வர சொன்னாய் என ஜெகா கேட்க, கதிரிடம் கொடுக்கிறார். கதிரும் வேண்டாம் என சொல்ல, ஜெகாவும் முல்லையின் அப்பா மட்டும் குடிக்கின்றனர். அப்போது கதிர் இருப்பதால் முல்லையின் அப்பா மறைத்துவைத்து கொடுக்கிறார்.

பின் கதிர் நான் வெளியே போறேன் என சொல்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா பக்கத்து தெருவில் புரோட்டா போடுறாங்க சூப்பராக இருக்கும் என சொல்ல, அதற்காக தினமும் கடையில் வாங்கி சாப்பிட முடியுமா என தனம் கேட்கிறார். மீனா ஒரு நாள் சந்தோசமாக சாப்பிட போவதாக சொல்ல, தனம் அது உடலுக்கு கெடுதி என சொல்கிறார். ஐஸ்வர்யா அப்படி எல்லாம் இல்லை ஒரு நாள் தான என ஐஸ்வர்யா சொல்ல, ஐஸ்வர்யா நானே சென்று வாங்கி கொண்டு வருவதாக சொல்கிறார். அப்போது இருட்டாகிவிட்டது என சொல்ல ஐஸ்வர்யா காலையில் இருட்டாக இருப்பதாக சொல்றீங்க இப்போது இப்படி சொல்றீங்க என கேட்க, கண்ணனை அனுப்பி வாங்கி கொண்டு வர சொல்லலாம் என சொல்கிறார்.

‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு கணவர் ஆர்யன் கொடுத்த முதல் பரிசு – அவரே வெளியிட்ட பதிவு!

மறுபக்கம் மூர்த்தி கண்ணன் இதை எல்லாம் தொட்டு கூட பார்க்க கூடாது என சொல்கிறார். அதெல்லாம் எனக்கு பிடிக்காது என கண்ணன் சொல்ல, நீ உள்ளே போ என மூர்த்தி சொல்கிறார். கண்ணன் இதை எப்படி குடிப்பார்கள் என நினைத்துமுகர்ந்து பார்க்க மூர்த்தி அதெல்லாம் உனக்கு எதற்கு என கேட்கிறார். ஆனால் ஜெகா கண்ணனை திட்ட விடு ஜெகா எதோ சின்ன பையன் என சொல்கிறார். அப்போது ஜெகா கண்ணன் சின்ன பையனா அவன் செய்த வேலைகள் எல்லாம் குடும்பத்தை எப்படி கஷ்டப்படுத்தியது என கேட்கிறார். பின் கண்ணனை மூர்த்தி உள்ளே போக சொல்கிறார்.

அப்போது ஐஸ்வர்யா வர பின்னாடி எல்லாரும் என்ன செய்கிறார்கள் என கேட்கிறார். எல்லாரும் தண்ணி அடிப்பதாக கண்ணன் சொல்ல, அண்ணன் எல்லாம் சும்மா தான் இருப்பதாக சொல்ல, கண்ணனும் ஐஸ்வர்யாவும் வருகின்றனர். அப்போது ஐஸ்வர்யா பின்னாடி தண்ணீ அடிப்பதாக சொல்ல மாமா அடிக்கிறார்களா என கேட்கிறார். அப்போது அண்ணன் எல்லாரும் அடிக்கவில்லை முல்லையின் அப்பாவும் ஜெகா மாமாவும் தான் அடிப்பதாக சொல்கிறார்.

பின் அனைவருக்கும் புரோட்டா வாங்கி வர சொல்லி தனம் சொல்ல, சரி என கண்ணன் சொல்கிறார். பின் எத்தனை என கணக்கு பண்ண, தனம் காசு வாங்கி வருவதாக சொல்கிறார். பின் ஜெகா மீண்டும் மூர்த்தியை குடிக்க சொல்ல வேண்டாம் என மூர்த்தி சொல்கிறார். தனம் அப்போது வர ஜெகா எல்லாத்தையும் மறைத்து வைக்கிறார். தனம் மூர்த்தி குடித்து இருக்கிறாரா என சந்தேகப்படுகிறார். நீங்க பேசுங்க என மூர்த்தியை கேட்க மூர்த்தி பேசி பார்க்கிறார். ஆனால் எதுவும் வாடை வரவில்லை என சொல்கிறார். அப்போது ஜெகா மாமா தான் குடித்து இருப்பதாக சொல்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!