ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்ல போகும் கண்ணம்மா, ஆசையாக காத்திருக்கும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

0
ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்ல போகும் கண்ணம்மா, ஆசையாக காத்திருக்கும் லட்சுமி - இன்றைய எபிசோட்!
ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்ல போகும் கண்ணம்மா, ஆசையாக காத்திருக்கும் லட்சுமி - இன்றைய எபிசோட்!
ஹேமா பற்றிய உண்மையை பாரதியிடம் சொல்ல போகும் கண்ணம்மா, ஆசையாக காத்திருக்கும் லட்சுமி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி அப்பாவை எதிர்பார்த்து ஆவலுடன் இருக்க, சௌந்தர்யா வருகிறார். பின் கண்ணம்மா ஹேமா பற்றிய உண்மையை சொல்ல போவதாக சௌந்தர்யாவிடம் சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமி கண்ணம்மாவிடம் அந்த பெண்ணின் அப்பா துபாயில் இருந்து வரும் போது அங்கே ஏர்போர்ட்டில் எல்லாத்தையும் வாங்கி வைத்துவிட்டார்களாம். நம்ம அப்பாவிடமும் அப்படி தான் வாங்கி வைப்பார்களா என கேட்க, ஓ அப்பா இங்கே தான எங்கையோ இருக்கிறார் நான் மறந்துவிட்டேன் என லட்சுமி சொல்கிறார். அப்போது வடிவு அப்பா வர தான போறாங்க அவர்களிடம் கேளுங்க என சொல்கிறார். பின் லட்சுமி உண்மையாகவே அப்பா வருவார் தான உன் முகம் சோகமாகவே இருக்கிறது உண்மையை சொல்லு என லட்சுமி கேட்கிறார்.

பின் வடிவு அம்மா கண்ணு அப்படி தான் இருக்கும் என லட்சுமியிடம் சொல்கிறார். அப்போது கார் சத்தம் கேட்க லட்சுமி ஆசையாக சென்று பார்க்கிறார். பின் சௌந்தர்யா குடும்பத்துடன் வர லட்சுமி ஏமாந்து பார்க்கிறார். சௌந்தர்யா லட்சுமி அப்பாவை எதிர்பார்த்து செய்து வைத்துள்ள அனைத்தையும் பார்த்து கவலைப்படுகிறார். அஞ்சலி பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல, குழந்தையை வாங்கி கண்ணம்மா கொஞ்சுகிறார். பின் அகில் ஆளே மாறிவிட்டார் என நினைத்து சந்தோசப்படுகிறார்.

‘செம்பருத்தி’ ஷபானாவிற்கு கணவர் ஆர்யன் கொடுத்த முதல் பரிசு – அவரே வெளியிட்ட பதிவு!

லட்சுமி வாசலையே பார்த்துக் கொண்டிருக்க சௌந்தர்யா அழைத்து பேசுகிறார். ஹேமா வரவில்லையா என லட்சுமியிடம் கேட்க, நீங்க எல்லாரும் வந்துடீங்க ஹேமா ஏன் வரவில்லை என கேட்க சௌந்தர்யா எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் லட்சுமி அம்மாவிற்கு உங்களை போல மேக்கப் போடுங்கள் என சொல்கிறார்.பின் சௌந்தர்யாவிடம் கண்ணம்மா தனியாக பேசுகிறார். உங்க மகன் இந்த நிகழ்ச்சிக்கு வருவார் என தான் என் மனது தோன்றுகிறது. அவரிடம் புது உண்மையை சொல்ல போகிறேன் என கண்ணம்மா சொல்ல, ஹேமாவும் என்னுடைய பொண்ணு என்ற உண்மையை நான் சொல்ல போகிறேன் என கண்ணம்மா சொல்கிறார்.

அதை கேட்டு சௌந்தர்யா அதிர்ச்சி அடைய, ஹேமாவும் லக்ஷ்மியும் என் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தை என்ற உண்மை தெரிய வரட்டும் என கண்ணம்மா சொல்கிறார். 9 வருசமாக உண்மையை மறைத்து எதுவும்நடக்கவில்லை என கண்ணம்மா சொல்கிறார். இதனால் பெரிய பிரச்சனை வரும் நீ லக்ஷ்மியின் அப்பா யார் என்பதை மட்டும் சொல்லு என சௌந்தர்யா சொல்கிறார். அப்படி நான் சொன்னால் லட்சுமிக்கு ஹேமா யார் என்ற உண்மை தெரியவரும் அதனால் குழந்தைகள் முன்னாடி இல்லை என்றாலும் சரி அவரை தனியாக அழைத்து சொல்ல தான் போகிறேன் என கண்ணம்மா சொல்கிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் சுசித்ரா வாங்கும் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

ஹேமாவிற்கு உண்மை தெரிந்தால் அவளுடைய மனதில் 1000 கேள்விகள் வரும் என கண்ணம்மா சொல்கிறார். கண்ணம்மா அதற்கு நீங்களும் உங்களது புள்ளையும் பதில் சொல்ல தான் வேண்டும் என சொல்கிறார். இதெல்லாம் என் மனதில் இருக்கும் ஆதங்கம் நான்கு பக்கமும் என்னை சுற்றி அடித்தால் நான் என்ன செய்வேன் என கண்ணம்மா கேட்கிறார். லட்சுமி மனதில் எவ்வளவு ஆசை இருந்தால் லட்சுமி இத்தனை கேள்வி கேட்பாள் நான் அவளை ஏமாற்றமாட்டேன் என கண்ணம்மா சொல்கிறார். நான் உண்மையை சொல்ல தான் போகிறேன் அதனால் என்ன நடந்தாலும்ச சரி என கண்ணம்மா சொல்கிறார்.

பின் கண்ணம்மாவின் அம்மா எங்கே என அகில் கேட்க, அவர் ஊருக்கு போயிருப்பதாக சொல்கிறார். பின் வடிவு எல்லாருக்கும் காபி கொடுக்க வேணு நீ இல்லை என்றால் கண்ணம்மா வருத்தமாக இருந்திருப்பார் என சொல்கிறார். கண்ணம்மா எங்கே என கேட்க, அவர்கள் மேக்கப் போட்டு இருப்பதாக சொல்கிறார். உங்க மகன் வந்துருவாரா என கண்ணம்மாவின் அப்பா கேட்க, இங்கே இருக்கும் அனைவரின் கேள்வியும் அதான் என அதற்கு பதில் அவனுக்கு தான் தெரியும் என வேணு சொல்கிறார். பின் கண்ணம்மா கிளம்பி வர வடிவு பார்த்து அதிர்ச்சி அடைகிறார். சௌந்தர்யா லக்ஷ்மியை அழைத்து கூப்பிட லட்சுமி கண்ணம்மாவை பார்த்து சந்தோசப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!