‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் கலாட்டா – இன்ஸ்டா வீடியோ!
தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் புதிய கதைக்களம் கோவிலில் வைத்து படமாக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் டேவிட், கம்பம் மீனா, சுஜிதா செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
என்னதான் சீரியலுக்குள் அடித்து பிடித்து சண்டையிட்டு கொண்டாலும் திரைக்கு பின்னால் சின்னத்திரை நட்சத்திரங்கள் எப்போதும் ஒற்றுமையாக காணப்படுவது உண்டு. பொதுவாக திரையுலக பிரபலங்கள் பலரும் திரைக்கு முன்னதாக குறிப்பிட்ட கதாப்பாத்திரமாக மாறி நடிப்பில் பின்னி இருந்தாலும், நிஜத்தில் அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் உண்டு. அதை எப்போதும் சிலர் ரகசியமாக வைப்பதும் உண்டு. ஆனால் திரைத்துறை பிரபலங்கலின் நிஜ வாழ்க்கையை தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் இருந்து வரும்.
தமிழக பள்ளி மாணவர்கள் பாடத்திட்டத்தில் புதிய அறிமுகம் – அமைச்சர் அன்பில் மகேஷ்!
இப்படி நடிகர், நடிகைகளின் நிஜ வாழ்க்கையை ரசிகர்கள் தெரிந்து கொள்ள பாலமாக இருப்பது சமூக வலைதளங்கள் தான். முன்பை விட சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் அத்தனை பேரும் தற்போது சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்து வரும் நடிகர் டேவிட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
கோவையில் செப்.29ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இவரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அவ்வப்போதுஎடுக்கும் படப்பிடிப்பு காட்சிகள், புகைப்படங்கள் ஆகியவற்றை ரசிகர்களுடன் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கோவிலில் வைத்தும் நடக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நட்சத்திரங்கள் சுஜிதா, கம்பம் மீனா மற்றும் டேவிட் ஆகிய மூவரும் இன்ஸ்ட்ராகிராம் செயலில் ஒரு ரீல்ஸ் செய்துள்ளனர். இந்த ரீல்ஸ் வீடியோவை டேவிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் அதனை வைரல் செய்து வருகின்றனர்.