விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் தலை தூக்கும் பாத்ரூம் பிரச்சனை – ரசிகர்கள் விமர்சனம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீண்டும் தலை தூக்கும் பாத்ரூம் பிரச்சனை - ரசிகர்கள் விமர்சனம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மீண்டும் தலை தூக்கும் பாத்ரூம் பிரச்சனை - ரசிகர்கள் விமர்சனம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் தலை தூக்கும் பாத்ரூம் பிரச்சனை – ரசிகர்கள் விமர்சனம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ஆரம்ப எபிசோடு முதல் ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வரும் பாத்ரூம் விஷயம் இன்றைய எபிசோடிலும் பேசப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

குடும்பப்பாங்கான கதைக்களம் கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக கடும் சரிவை சந்திக்க துவங்கி இருக்கிறது. இதுவரை திருமணம், காதல், சண்டை என ஸ்வாரசியமாக வெளியான எபிசோடுகள் ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக இருந்தது. அதனால் TRP ரேட்டிங்கிலும் முதன்மையான இடத்தை பிடித்து வந்தது இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினியின் சின்னத்திரை டூ சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆனால் கண்ணன், ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு பிறகு, இந்த சீரியலின் கதைக்களம் சற்று போரடிக்க துவங்கியது. அதனால் கதையில் விறுவிறுப்பை கூட்டும் விதமாக லட்சுமி அம்மாவின் இறப்பு காட்சிகள் ஒளிபரப்பாகி மீண்டுமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை சரிவில் இருந்து மீட்டது. தொடர்ந்து தனத்தின் பிரசவம், குழந்தை பிறப்பு, அதனால் மீனாவுக்கு ஏற்படும் கோபம் என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மொத்த கதைக்களமும் குழந்தைகளை மையமாக வைத்து தான் நகர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போதும் கூட கயல் பாப்பாவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட கதைக்களம் மீண்டுமாக ரசிகர்களுக்கு போரடிக்க துவங்கி இருக்கும் வேளையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ஆரம்பத்தில் காட்டப்பட்ட பாத்ரூம் பிரச்சனை மீண்டுமாக இன்றைய எபிசோடில் இடம்பிடித்துள்ளது. அதாவது, கயலின் பிறந்தநாளை முன்னிட்டு மீனா, ஜீவா இருவரும் ஜனார்த்தனன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

Vijay Tv Bigg Boss 5 Promo | அம்மாவை பற்றி கூறி அனைவரையும் நெகிழ செய்த அமீர் – கண்ணீர் சிந்தும் போட்டியாளர்கள்!

அங்கு வைத்து மீனா, ஜனார்த்தனன் இருவரும் கண்ணன், ஐஸ்வர்யா பற்றி பேசிக்கொண்டிருக்க அந்த வீட்டில் ஏற்கனவே இடம் இல்லை. பாத்ரூம் வசதி கூட இல்லை. இப்போது இவர்கள் வேற அந்த வீட்டில் வந்து விட்டார்களா என்று ஜனார்த்தனன் வழக்கம் போல மீனாவை தூண்டி விடுகிறார். இதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இந்த பாத்ரூம் பிரச்சனை தீராது போல என்றும், வேறு கதை இல்லாத காரணத்தால் அவ்வப்போது பாத்ரூம் பிரச்சனை தலை தூக்குவதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!