‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அறிமுகமாகும் பிரபல வில்லன் நடிகர் – வைரலாகும் புகைப்படம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அறிமுகமாகும் பிரபல வில்லன் நடிகர் - வைரலாகும் புகைப்படம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அறிமுகமாகும் பிரபல வில்லன் நடிகர் - வைரலாகும் புகைப்படம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அறிமுகமாகும் பிரபல வில்லன் நடிகர் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் கதிர், ஜீவா இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இதில் புதிதாக ஒரு கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்றிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பலருக்கும் பிடித்தமான நெடுந்தொடராக இருந்து வருகிறது. குறிப்பாக, குடும்பப்பாங்கான கதைக்களம் கொண்ட இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம். இந்த சீரியல் மட்டும் தான் அதிகபட்ச வன்முறை, வெறுப்புணர்வு போன்ற காட்சிகள் இல்லாமல் இதுவரைக்கும் ஒளிபரப்பாகி வருகிறது.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் மாஸ் என்ட்ரி கொடுத்த புகழ் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

இப்படி இருக்க ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களத்தில் ஸ்வாரசியத்தை கூட்டும் விதமாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் கட்டி இருக்கும் கடைக்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது. அதாவது சரியான முன் அனுமதி இல்லாமல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் அந்த புதிய கடையை கட்டி இருப்பதாக அதிகாரிகள் வந்து கடையை சீல் வைத்து செல்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த கதிர், ஜீவா இருவரும் சீல் வைக்கும் அதிகாரிகளிடம் கெஞ்ச அவர்கள் காது கேளாதவர்கள் போல அங்கிருந்து சென்று விடுகின்றனர்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி – ஷாக்கிங் ப்ரோமோ!

இது தொடர்பான ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களத்தில் கதிர், ஜீவா இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது போல சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சியில் சினிமா துறையை சேர்ந்த பிரபலமான வில்லன் நடிகர் ஒருவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக அறிமுகம் ஆகும் வில்லன் நடிகரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here