விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி – ஷாக்கிங் ப்ரோமோ!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி - ஷாக்கிங் ப்ரோமோ!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி - ஷாக்கிங் ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி – ஷாக்கிங் ப்ரோமோ!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து சமீபத்தில் சீரியலை விட்டு விலகிய நடிகை ரோஷினி ஹரிப்ரியன், மீண்டும் அதே சீரியலில் கண்ணம்மாவாக களமிறங்க இருப்பதை போல ஷாக்கிங் ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாரதி கண்ணம்மா’ சுமார் 700 எபிசோடுகளை கடந்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறது இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். ஏனென்றால் இந்த சீரியலின் கதைக்களமும், அதில் நடித்து வரும் கதாப்பாத்திரங்களும் மக்களோடு ஒன்றி இருப்பதால் இதற்கு ரசிகர்கள் அதிகம்.

கதறி அழும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனை சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

இப்படிப்பட்ட பெருமைகளை உடைய ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். நடிப்பில் எவ்வித முன் அனுபவமும் இல்லாமல் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கண்ணம்மாவாக நடித்து ஆரம்பத்தில் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்திருந்தாலும், பின்னாட்களில் கண்ணம்மா ரோலில் இவரை விட யாராலும் சிறப்பாக செய்ய முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெயர் பெற்றிருந்தவர் நடிகை ரோஷினி.

விஜய் டிவி “குக் வித் கோமாளி” ராகுல் தாத்தா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அப்பாவியாக வரும் கண்ணம்மா ஒரு கட்டத்தில் அதிரடியாக மாறி, தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருந்தார் ரோஷினி. இப்படி இருக்க சமீபத்தில் சீரியலை விட்டு விலகி இருக்கும் நடிகை ரோஷினி தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிகை ரோஷினி ரீஎன்ட்ரி கொடுப்பது போலவும், சீரியலின் கிளைமேக்ஸ் காட்சிகளில் கண்ணம்மாவாக ரோஷினி நடிக்க இருப்பதை போலவும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here