‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் மாஸ் என்ட்ரி கொடுத்த புகழ் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

0
'குக் வித் கோமாளி' சீசன் 3ல் மாஸ் என்ட்ரி கொடுத்த புகழ் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
'குக் வித் கோமாளி' சீசன் 3ல் மாஸ் என்ட்ரி கொடுத்த புகழ் - வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் மாஸ் என்ட்ரி கொடுத்த புகழ் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்திருந்த கோமாளி புகழ். அவர் தற்போது நிகழ்ச்சி நடைக்கும் செட்டுக்கு என்ட்ரி கொடுத்துள்ளவாறு சில புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

குக் வித் கோமாளி புகழ்

மக்களின் பேராதரவுடன் தற்போது 3வது சீசனுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி கடந்த வாரத்தில் பிரமாண்டமாக துவங்கியது. இம்முறை 10 போட்டியாளர்கள், 10 கோமாளிகள் என கலகலப்பாக துவங்கிய இந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியின் லான்ச் எபிசோடு மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்றிருக்கிறது. என்றாலும் இந்த சீஸனின் ஆரம்ப எபிசோடில் நடைபெற்ற சில சம்பவங்கள் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கண்ணம்மாவாக களமிறங்கும் ரோஷினி – ஷாக்கிங் ப்ரோமோ!

அதாவது, செஃப் வெங்கடேஷ் பட், கோமாளி பரத்தை அடித்தது ரசிகர்களிடையே சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ‘குக் வித் கோமாளி’ ஷோவின் அடுத்த எபிசோடுகளை காண ரசிகர்கள் மத்தியில் ஆவல் மேலோங்கி இருக்கிறது. இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொள்வாரா என்று பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ரசிகர்களின் ஆர்வத்தை தணிக்கும் விதமாக ‘குக் வித் கோமாளி’ ஷோவில் புகழின் என்ட்ரி இன்னும் ஒரு சில எபிசோடுகளில் வெளியாகலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வரும் புகழ் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ன் ஆரம்ப எபிசோடில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரை எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தி காணப்பட்டது. இந்நிலையில் ‘குக் வித் கோமாளி’ ஷோவின் அடுத்த வார எபிசோடுக்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

கதறி அழும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனை சமாதானம் செய்யும் ஐஸ்வர்யா விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

இந்த நிகழ்ச்சியில் புகழ் கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. என்றாலும் புகழ், ‘குக் வித் கோமாளி’ ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டுள்ளாரா அல்லது நிகழ்ச்சி நடைபெறும் செட்டை விசிட் செய்திருக்கிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் புகழ் ‘குக் வித் கோமாளி’ ஷோவில் இணைந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here