போதையில் மீனாவிடம் உளறும் ஜீவா, உண்மையை தெரிந்து கொள்ளும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இந்த வாரம்!

0
போதையில் மீனாவிடம் உளறும் ஜீவா, உண்மையை தெரிந்து கொள்ளும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இந்த வாரம்!
போதையில் மீனாவிடம் உளறும் ஜீவா, உண்மையை தெரிந்து கொள்ளும் முல்லை - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' இந்த வாரம்!
போதையில் மீனாவிடம் உளறும் ஜீவா, உண்மையை தெரிந்து கொள்ளும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இந்த வாரம்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இந்த வாரம் ஒளிபரப்பட இருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, ஜீவா மீனாவின் தம்பியான கைலாஷுடன் இணைத்து குடிப்பாராம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும்,ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். எப்போதும் போலவே கொடுமைக்கார மாமியார், சண்டைகளை தூண்டிவிடும் நாத்தனார் என்பது போன்ற கதைக்களம் என்று அல்லாமல், கூட்டு குடும்ப கதையினை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி வருகின்றனர் என்று தான் கூற வேண்டும். இந்த சீரியலின் சிறப்பே கூட்டு குடும்பத்தில் நடக்கும் அனைத்து வித சண்டைகள் மற்றும் சந்தோஷங்களையும் அழகாக எடுத்து காட்டி வருகின்றனர்.

மீண்டும் இணைந்த “பாரதி & கண்ணம்மா” – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது இந்த சீரியலில் புதிய கடையினை திறக்க குடும்பத்தினர் அனைவரும் பாடுபடுகின்றனர். இறுதி நேரத்தில் கதிர் மேல் இருக்கும் முன்விரோதத்தால் அதிகாரி ஒருவர் கடையினை திறக்க விடாமல் செய்து விடுகிறார். ஆனால், மூர்த்தி உட்பட அனைத்து குடும்பத்து உறுப்பினர்களும் போராடி கடையினை திறந்து விடுகின்றனர். இந்நிலையில், இந்த சீரியலில் அடுத்ததாக ஜீவா கடை திறப்பு விழாவில் மீனாவின் தம்பி கைலாஷுடன் நன்றாக பழகுகிறார். அப்போது அனைவரும் மது அருந்த ஜீவாவும் வேறு வழி இல்லாமல் மது அருந்துகிறார். மது அருந்திய போதையில் மீனாவிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பள பட்டியல் – முழு விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!

இதனால் பல நாட்களுக்கு பிறகு மீனா மற்றும் ஜீவா இருவருக்கும் காதல் காட்சிகள் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போலவே ஐஸ்வர்யா காலேஜ் செல்லாமல் வெளியே வேறு எங்கோ செல்லுகிறார். இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, முல்லை பீரோலை திறக்க போகிறார். ஆனால், அங்கே தான் முல்லையின் மெடிக்கல் ரிப்போர்ட் இருக்கிறது. பீரோலை அவர் திறக்க போவதை பார்க்கும் கதிர் அவருக்கு பல காரணங்களை கூறி திறக்க விடாமல் செய்கிறார். கதிரின் இந்த செயலால் முல்லை அவரை சந்தேகப்படுகிறார். இது போன்ற காட்சிகள் இனி வர இருப்பதால் இந்த வாரம் சீரியலில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என்று தான் கூற வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here