மீண்டும் இணைந்த “பாரதி & கண்ணம்மா” – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!
தமிழில் டாப் சீரியலாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் அருண் மற்றும் வினுஷா நினைத்து விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர். அது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவி சீரியல்களில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் குடும்ப சீரியல் ஆகும். இதில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் வாழ்க்கை கதையை பற்றியே எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தொடக்கத்தில் சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் இல்லாமல் இருந்தாலும் கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்பியதும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் அதிகமாக வந்தது. அன்று முதல் சீரியல் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் வந்தனர்.
விஜய் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பள பட்டியல் – முழு விவரம் வெளியீடு! ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் 600 எபிசோடுகளுக்கு மேலாக கண்ணம்மாவாக நடித்த ரோஷினி சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கண்ணம்மாவாக நடித்து வருகிறார். பொதுவாக சீரியலில் முக்கிய கதாபாத்திரம் மாற்றப்பட்டால் TRPயில் பல வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். ஆனால் வினுஷா தேவியின் எதார்த்தமான நடிப்பால் சீரியல் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அதனால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.
பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
மேலும் சீரியல் கதை அடுத்தகட்டத்துக்கு எப்போது செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த சீரியலில் பிறந்தநாள் விழாவில் கண்ணம்மா லக்ஷ்மியின் அப்பா பற்றி சொல்ல போகிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்க போகிறது. இந்நிலையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் மற்றும் கண்ணம்மாவாக நடித்து வரும் வினுஷா இணைந்து விளம்பர படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றனர். அது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.