கதிர், முல்லை ஜோடிக்கு குழந்தை பிறக்காது – டாக்டர் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்!

0
கதிர், முல்லை ஜோடிக்கு குழந்தை பிறக்காது - டாக்டர் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர்!
கதிர், முல்லை ஜோடிக்கு குழந்தை பிறக்காது - டாக்டர் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குடும்பத்தினர்!
கதிர், முல்லை ஜோடிக்கு குழந்தை பிறக்காது – டாக்டர் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்!

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் காட்சிகளில் பல முறை முல்லை குழந்தை பிறக்காததை நினைத்து தான் வருத்தத்தில் இருப்பது போல் வருகிறது. இந்நிலையில், முக்கிய திருப்பம் ஒன்று சீரியலில் வர இருக்கிறது.

கதிர்- முல்லை ஜோடி:

தற்போது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் கயல் பாப்பா பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்திருக்கும் நிலையில், அடுத்து கயலுக்கு மொட்டை போடும் விழா பற்றி பேச்சை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஒரு விழாவும், அதனால் பல கலாட்டாக்களும் நடக்க இருப்பது உறுதியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் எப்போதும் பிரச்னைக்கு பிள்ளையார் சுழி போடும் மீனா, தற்போது மீண்டும் வீட்டில் இருக்கும் அனைவரும் தனத்தின் குழந்தை பாண்டியனுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக நினைக்கிறார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா & வருண் – டபுள் எவிக்சன்! ரசிகர்கள் அதிர்ச்சி!

அதை அனைவரிடமும் சட்டென்று சொல்லியும் விடுகிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சங்கப்படுகின்றனர். தனம் மீனா சொன்னதையே நினைத்து மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். அதை மூர்த்தியிடம் சொல்ல அவரும் மீனாவை பற்றி உனக்கு தெரியாதா? நீ அத பத்தி கவலப்படாத என்று சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் தினமும் முல்லை கதிரிடம் தங்களுக்கு குழந்தை இல்லை என்று நினைத்து அழுகிறார். தினமும் இதை பற்றியே முல்லை கவலைப்படுவதால் கதிர் என்ன செய்வதென்று தெரியாமல் அவரை சமாதானம் செய்து வருகிறார்.

கண்ணம்மா மகள் லக்ஷ்மியை கடத்தும் வெண்பா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

இந்நிலையில், கதையில் அடுத்து வரும் திருப்பமாக கதிர்- முல்லை இருவரும் குழந்தை விஷயமாக டாக்டரை சென்று பார்க்கின்றனர். அப்போது சோதித்து பார்ப்பதில், முல்லைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறி விடுகிறார்கள். இதனால் மிகவும் நொந்து போய் விடுகிறார் முல்லை. எனவே குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் கவலைப்படுகின்றனர். அதே நேரம் வேண்டுதல், வைத்தியம் என்று மாறி மாறி காட்சிகள் வந்து, திடீரென்று முல்லை கர்ப்பமாக இருப்பதாக கதையில் திருப்பங்கள் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here