கண்ணம்மா மகள் லக்ஷ்மியை கடத்தும் வெண்பா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
கண்ணம்மா மகள் லக்ஷ்மியை கடத்தும் வெண்பா, அதிர்ச்சியில் பாரதி - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
கண்ணம்மா மகள் லக்ஷ்மியை கடத்தும் வெண்பா, அதிர்ச்சியில் பாரதி - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
கண்ணம்மா மகள் லக்ஷ்மியை கடத்தும் வெண்பா, அதிர்ச்சியில் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

கண்ணம்மா தான் தன்னை சதி செய்து சிறைக்கு அனுப்பியதை அறிந்த வெண்பா, சிறையில் இருந்து மீண்டும் வெளியில் வந்து செய்யும் அட்டகாசங்கள் தான் இனி பாரதி கண்ணம்மா கதையின் முக்கிய திருப்பங்களாக அமைய இருக்கிறது.

வெளியில் வரும் வெண்பா:

கண்ணம்மாவிற்கு தனக்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்ற விஷயம் தெரிந்த பின்னர், தனனுடைய மற்றொரு குழந்தை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் சிரமப்படுகிறார். இதனை அறிந்த வெண்பா உன் குழந்தை எங்க இருக்குன்னு எனக்கு தெரியும் என்று கூறி கண்ணம்மாவை தொடர்ந்து அலைக்கழிக்கிறார். ஒரு கட்டத்தில் லட்சுமி தான் தனது மற்றொரு மகள் என்ற விஷயத்தை சௌந்தர்யா மூலமறிந்து கொள்ளும் கண்ணம்மா, தன்னை வெண்பா ஏமாற்றியதற்காக அவரை பழிவாங்க நினைத்து, கருக்கலைப்பு குற்றத்தில் வெண்பாவை மாட்ட செய்து,சிறைக்கு அனுப்புகிறார்.

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்கொலை செய்து கொண்ட முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!

கண்ணம்மா செய்த திட்டம் தான் இது என்பதை அறிந்த வெண்பா, சிறையில் இருந்து கொண்டே கண்ணம்மா மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இதனை பாரதியிடம் சொன்ன பிறகு தான் பாரதி விவாகரத்து வழக்கை தொடர்ந்தார். ஆனால் வெண்பா அஞ்சலிக்கு தவறான மருந்துகளை கொடுத்தது பற்றி தெரிந்து கொண்ட பாரதி வெண்பா மீது கோபமடைகிறார். இதனால் கண்ணம்மா மற்றும் பாரதி இருவரையும் வெண்பா பழிவாங்க நினைக்கிறார். இந்நிலையில், வரும் வாரத்தின் காட்சிகளில் தனக்கு அம்மா கனவுகள் வருவதால் கவலையில் இருக்கும் லட்சுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறாள்.

பிக் பாஸ் கேபி நடிக்கும் விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் லக்ஷ்மியை பார்க்க பள்ளிக்கு வரும் கண்ணம்மா அவளை காணாமல் பயந்து விட, பின்னர் சௌந்தர்யா தான் அவ வீட்டில் இருக்கா என்று கூறுகிறார். ஆனால் வீட்டில் இருந்து லட்சுமி கண்ணம்மாவை பார்க்க தனியாக கிளம்புகிறாள். ஆனால் லட்சுமி காணாமல் போய் விட்டாள் என்று பயந்து அனைவரும் பல இடங்களில் தேடி, வெண்பா தான் லக்ஷ்மியை கடத்தியது போல் காட்டி, கதையில் கொண்டு வந்து கடைசியில் குழந்தை கண்ணம்மா வீட்டில் இருப்பது போல் முடிப்பார்கள் என்று தெரிகிறது. வரும் வாரத்தில் வெண்பாவின் ரீஎன்ட்ரி எதிர்ப்பார்க்கப்படுவதால் கண்டிப்பாக சுவாரஸ்யமாக இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here